உலக அமைதிக்கே கடும் அச்சுறுத்தலாகவும், பல அப்பாவி மக்களின் உயிருக்கும், உடைமைக்கும், கடும் சேதத்தை. உருவாக்கிய ஒரு அமைப்பு உலகில் உள்ளது என்றால் அது ஐ.எஸ்.ஐ.எஸ் என்பதில், யாருக்கும் மாற்று, கருத்து இருக்க முடியாது.
இவர்களின் அட்டுழியங்களால் பல வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை கடும் இன்னல்களை சந்தித்து வருகிறது என்பது நிதர்சனம். ஐ.எஸ்.ஐ.எஸ் குழு உலகம் முழுவதும் தங்கள் இயக்கத்திற்கு இன்று வரை ஆட்களை சேர்த்து வருகிறது. இந்தியாவில் இருந்து சென்ற சிலரை மத்திய அரசு மீட்டு தாயகம் அழைத்து வந்துள்ளது.
ஆனால் சிலரின் நிலை என்னவென்றே, அறிய முடியாத சூழ்நிலை இன்று வரை இருந்து வருகிறது. காபூல் சிறையில் தான் வாடுவதாக கேரளாவை, சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் வீடியோ, ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அக்காணொளியில் இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
என் பெயர் ஆயிஷா, எனது கணவர் பெயர் அப்துல் ரஷீத் அப்துல்லா, நாங்கள் ’ஷரியா’ மார்க்க நெறிமுறைகளை, தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடன், கேரளாவில் இருந்து 2016-ம் ஆண்டு ஆப்கான் வந்து. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுவில் எங்களை இணைத்துக் கொண்டோம்.
நாங்கள் இங்கு வந்து பார்க்கும் பொழுது, நிலைமை மிக கொடுரமாக இருந்தது. மக்கள் நிம்மதியாக கூட , மசூதிகளில் தொழ கூட முடியாத, அவலநிலை நிலவுவதாக வேதனையுடன் கூறியுள்ளார். ஒழுக்கமான மார்க்கத்திற்கு வழி, கிடைக்கும் என நானும் எனது கணவரும், இக்குழுவில் இணைந்தோம்.
ஆனால் எங்களுக்கு இது மிகப்பெரிய, ஏமாற்றம் அளிக்கிறது. மீண்டும் இந்தியா வந்து என் கணவரின், குடும்பத்தாருடன் வசிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் மற்றொரு பயங்கரவாதி பெண்ணான பாத்திமா தானும் இந்தியா திரும்ப வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.
தற்பொழுது ஆப்கான் சிறையில் 4 இந்திய பெண்கள் உள்ளனர். அவர்களில் மூன்று பேர் மதம் மாறியவர்கள். ஐஎஸ்.ஐ.எஸ்.,ஸில் சேர கணவருடன் சென்றவர்கள். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வருவது மிக கடினம் என்று கூறப்படுகிறது. லவ் ஜிகாத் மூலம் மதம் மாறி சென்ற அப்பெண்கள் தங்கள் கணவரையும், அன்பான குடும்பத்தையும் இழந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி ;
Organiser Weekly