48 மணிநேரம் அவகாசம், நிரூபிக்க முடியவில்லையெனில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – அண்ணாமலை அதிரடி சவால் !

48 மணிநேரம் அவகாசம், நிரூபிக்க முடியவில்லையெனில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – அண்ணாமலை அதிரடி சவால் !

Share it if you like it

செய்தியாளர்கள் சந்திப்பில், பேசிய திமுக அமைச்சர் மனோதங்கராஜ், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பேசுவது தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தான் ஒரு பரம முட்டாள் என்பதை அண்ணாமலை நிரூபித்திருக்கிறார். இவ்வாறு அவர் பேசியது சர்ச்சையானது.

இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திரு மனோதங்கராஜ் அவர்களே, இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். .

நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார்

இதற்கு மனோதங்கராஜ், ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.

மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்! இவ்வாறு பதிவிட்டிருக்கிறார். ஆனால் கடைசிவரை அந்த ஆதாரத்தை வெளியிடுவதை பற்றி பேசாமல் பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள் என்று வாயாலே வடை சுற்றுகிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் திமுக உபியை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it