கேரளாவிற்கு குரல் கொடுத்த தமிழக போராளிகள் விழுப்புரத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்திற்கு கள்ள மெளனம்..!

கேரளாவிற்கு குரல் கொடுத்த தமிழக போராளிகள் விழுப்புரத்தில் நிகழ்ந்த துயர சம்பவத்திற்கு கள்ள மெளனம்..!

Share it if you like it

பட்டினியால் 5 வயது குழந்தை விழுப்புரத்தில் மரணம்.

கேரள மாநிலத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர் மது என்பவரை 16 பேர் கொண்ட நண்பர்கள் குழு பொய் குற்றச்சாட்டு சுமத்தி அடித்தே கொன்ற சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. நாடு முழுவதும் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. தமிழகத்தை சேர்ந்த நடிகர்கள் உட்பட பலர் தங்களது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து இருந்தனர். அதே போன்று கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றித் திரிந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி மருந்து வைத்து கொடுத்து கொன்ற சம்பவத்திற்கும் பலர் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி இருந்தனர்.

கேரளாவிற்கு குரல் கொடுத்த தமிழ் நடிகர்கள், போராளிகள், விழுப்புரத்தில் 5 வயது குழந்தை பசியால் மரணம் அடைந்தது குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஆளும் தி.மு.க அரசு மீது உள்ள பயமா? அல்லது பாசமா? என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image

Share it if you like it