சமீபத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான பொன்.மாணிக்கவேல் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஹிந்துக்களின் புகழ்பெற்ற மிக பழமையான கோவில்களை புதுப்பித்து பாதுகாக்காமல் மெத்தன போக்கை காட்டி வருகிறது. மேலும் தமிழகத்தின் தரங்கம்பாடியில் அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு பொ.ஊ. 1620 இல் கட்டப்பட்டது தான் டேனிஷ் கோட்டை. இந்த கோட்டையை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப 4 கோடியே 46 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீரசோழபுரம் என்ற ஊரில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. அந்த கோவில் பராமரிக்கப்படாமல் மண்டபங்கள் உடைந்து மிகவும் சிதிலமடைந்து, கோவிலுக்குள் ஆடுகளின் சாணம் நிறைந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அந்த கோவிலிலும் சிலை காணாமல் போனது. அதை நான்தான் கண்டுபிடித்து FIR பதிவு செய்ததாகவும், இதனை எல்லாம் பார்த்தால் வயிறு எரிகிறது. இதில் கோவில் நிலங்களை தமிழக அரசு மீட்டுள்ளது என்று கபட நாடகம் ஆடுகிறார். வேண்டுமென்றால் பொதுவெளியில் கோவில்களை பற்றி என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் வரட்டும் என்று கூறுகிறார். கோவில்களை வலுக்கட்டாயமாக மாநில அரசு வைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கோயில்களில் ரூ. 7.50/யூனிட் அதேசமயம் மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ. 1.50/யூனிட். கோவில்களுக்கு ஒரு விதி தேவாலயங்கள் மசூதிகளுக்கு ஒரு விதியா. இது எந்த விதத்தில் நியாயம். பச்சை குழந்தைகளிடம் கேட்டால் கூட இதை அநியாயம் என்று சொல்லி விடுவார்கள். இவ்வாறு அந்த காணொளியில் மிகவும் ஆதங்கமாக பேசியுள்ளார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல்.அந்த காணொளியானது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கோவிலுக்கு 7.50 மசூதி, தேவாலயத்துக்கு 1.50, இது நியாயமா?
Share it if you like it
Share it if you like it
3 thoughts on “கோவிலுக்கு 7.50 மசூதி, தேவாலயத்துக்கு 1.50, இது நியாயமா?”
Comments are closed.
We need Equal Right irrespective of religion.
Hindus should think
மிகவும் சரி
Temples are our religious and cultural treasure of our nation. This has to saved