Share it if you like it
- காசியிலுள்ள கங்கா நதி காணாமல் போகும்.
- எல்லா சிவலிங்ககளிலும் வியர்வை உண்டாகும்.
- திருப்பதி கோவிலில் முதலை புகுந்து அதனால் பூஜைகள்
மூன்று நாட்கள் தடைப்படும். - காளஹஸ்தி கோபுரங்கள் சேதமடையும்.
- புண்ணிய நதி, தீர்த்தம், போன்ற இடங்களில் மக்கள் வியாபாரிகளாலும் புரோகிதர்களாலும் ஏமாற்றப்படுவர்.
- அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.
- முஸ்லீம்களின் ஆதிக்கமும் அதனால் அரசும் பாதிப்படையும் வஞ்சனைகள் தலைதூக்கும்.
- புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும், தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு, அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.
- மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான், ஆனால் அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி, மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.
- காளஹஸ்தி சுவர்ணமகி ஆற்றில் அதிசயம் தோன்றும்.
- நிழற்படங்கள் அசைந்தாடும் அது தர்ம வழிகளை அழிக்கும்.
- குதிரை, மாடுகள், வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக, இயந்திர வாகனங்களும் அதி வேகமாக செல்லும் போக்குவரத்து உருவாகும்.
தொடரும்…
Share it if you like it