கலவர பூமியான காஷ்மீர் மெல்ல மெல்ல அமைதி பூமியாக மாறி வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கை என்பதுடன் அரைநூற்றாண்டுக்கு மேல் சொல்லோண்ணா துயரத்தை அனுபவித்த மக்கள் இன்று அமைதி காற்றை சுவாசிக்கும் நிலையை நோக்கி செல்வது ஆரோகியமான விஷயமாகும்.
அதன் அடிப்படையில் அம்மாநிலத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. காஷ்மீருக்கு என்றே தனி ராணுவப்படை பிரிவு, வெகு விரைவில் விமானப்படை பிரிவு என்றும் மேலும் அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ’ஆப்ரேஷன் மா’ என்னும் நடவடிக்கையை ராணுவம் துவங்கியுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவையும் மத்திய அரசு தற்பொழுது நிறைவேற்றியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 25,000 பேருக்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டது. இனி பணியாற்றலாம். நிலம் வாங்கலாம். 73 வருட கனவு நனவானது.
ஜம்மு காஷ்மீரில் 25,000 பேருக்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டது. இனி பணியாற்றலாம். நிலம் வாங்கலாம்.73 வருட கனவு நனவானது.
— Narayanan Thirupathy (@Narayanan3) June 27, 2020