நாடு கடத்தப்பட்ட 73 விடுதலை போராளிகள்
சிவகங்கை சீமையை 21 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடுதலை வேண்டி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஜம்புத் தீவு பிரகடனம் மூலமாக வெளிப்படையாக எச்சரிக்கை செய்த மாமன்னர் மருது பாண்டியர்களையும் அவர்களது குடும்பமும் மற்றும் படைவீரர்கள் 500 மேற்பட்டவர்களை 24.10.1801 அன்று திருப்பத்தூரில் பொதுமக்களின் முன்னிலையில் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்டார்கள். அதன்பின்னரும் ஆங்கிலேயர்கள் ரத்த வெறியாட்டம் ஓயவில்லை மருது பாண்டியர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுகமாக உதவி செய்தார்கள் என சந்தேகத்தின் பேரில் 73 பேரை அடையாளப் படுத்தப்பட்டார்கள்.
அதில் மன்னர் சின்ன மருது மகனாகிய துரைசாமி என்ற சிறுவனையும், மன்னர் பரம்பரை வழிவந்த பெரிய உடையான் தேவரையும் இந்த பட்டியலில் இணைத்துக்கொண்டனர்.
பல கட்ட விசாரணைக்கு பிறகு அனைவரையும் பல மாதங்கள் இங்கேயே சிறை வைத்தனர். அதன் பின்னர் மலேசியாவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பயங்கரமான பினாங்கு தீவிற்கு நாடு கடத்த 73 பேரையும் 11.12.1802 தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
1) வேங்கன் பெரிய உடையத்தேவர் – சிவகங்கை
2) துரைசாமி (மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் மகன்)
3) சின்ன லக்கையா என்ற பொம்மை நாயக்கர் – வாராப்பூர்
4) ஜெகநாத ஐயன் – இராமநாதபுரம்
5) பாண்டியப்ப தேவன் – கருமாத்தூர்
6) சடையமான் – கருமாத்தூர்
7) கோசிசாமி தேவர் – கருமாத்தூர்
8) தளவாய் மாடசாமி நாயக்கர் – பாஞ்சாலங்குறிச்சி
9) குமாரத்தேவன் – முள்ளூர்
10) பாண்டியன் – பதியான்புத்தூர்
11) முத்துவீர மணியக்காரர் – ஆணைக்கொல்லம்
12) சாமி – மணக்காடு
13) ராமசாமி
14) எட்டப்ப தேவர் – நான்குநேரி
15) பாண்டிய நாயக்கர் – கோம்பை
16) மண்டைத் தேவர்
17) மலையேழ்மந்தன்
18) வீரபாண்டிய தேவர்
19) கருப்ப தேவர்
20) சுப்ரமணியம்
21) மாடசாமி
22) பெருமாள்
23) உடையத்தேவர் (த/பெ : சின்னப்பிச்சை தேவர்)
24) தேவி நாயக்கர்
25) முத்துக்கருப்ப தேவர்
26) மண்டந்தேவர் (த/பெ : சங்கரநாராயண தேவர்)
27) பேயன் (த/பெ : பால உடையாத் தேவர்)
28) அழகிய நம்பி
29) ஒய்யக்கொண்ட தேவர்
30) சிவனுத்தேவர்
31) காணி ஆழ்வார்
32) மூப்பு உடையான்
33) கொண்டவன்
34) வீரபத்திரன் – நான்குநேரி
35) சிலம்பன் – நான்குநேரி
36) பேயன் – நான்குநேரி
37) ராமசாமி – நான்குநேரி
38) இருளப்பன் – நான்குநேரி
39) மாடசாமி – நான்குநேரி
40) வீரபாண்டியன்
41) வெங்கட்டராயன் – நான்குநேரி
42) உடையார்
43) முத்துராக்கு – நான்குநேரி
44) முத்துராக்கு – ஆனைக்கொல்லம்
45) சொக்கதலைவர் – நான்குநேரி
46) இருளப்ப தேவர் – நான்குநேரி
47) மல்லையா நாயக்கர் – இளவம்பட்டி
48) சுப்பிரமணி நாயக்கர் – கண்டநாயக்கன் பட்டி
49) மல்லைய நாயக்கன் – இலாம்பட்டி
50) சல்வமோனிய நாயக் – கட்ட நாயக்கன்பட்டி
51) தோமச்சி நாயக்
52) சுளுவமோனியா நாயக் – ஆடினூர்
53) இராமசாமி – குளத்தூர் பாலிகர் பேரன்
54) பிச்சாண்டி நாயக் – எருவுபோபரம்
55) தளவாய் கல்லுமடம்
56) சின்ன மாடன் – பசுவந்தனை
57) வைடியம் மூர்த்தி – கந்தீஸ்வரம்
58) தளவாய் பிள்ளை (தேசகாவல் மணிகர்)
59) சுளுவமணியம்
60) பெடன்ன நாயக் (சுளுவமணியம் மகன்) – தூத்துக்குடி போராட்ட தளபதி
61) கிருஷ்ணமா நாயக்
62) வாயுளன் – குளத்தூர்
63) மிளனன் – அறச்சேரி
64) வைல முத்து -கங்கராயகுறிச்சி
65) ராமன் – சுவளி
66) பாலையா நாயக் – நாஞ்சி நாட்டு சூரன்குடி
67) குமரன்
68) வெள்ளிய கொண்டான் வெள்ளியன்
69) இராமன்
70) அல்லேக சொக்கு
71) சேக் உசேன்
72) அப்பாவு நாயக்
73) குப்பன்னா பிள்ளை
இரண்டு இரண்டு பேராக இனைத்து கை கால்கள் உடன் சேர்த்து தடிமனான இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு 73 பேரையும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கிளம்பிய கப்பல் 80 நாட்களுக்கு பிறகு பினாங்கு தீவிற்கு சென்றடைந்தது. போகும் வழியிலேயே போதிய உணவு உணவில்லாமலும், ஆங்கிலேயர்களின் சித்திரவதையாலும் 20 போராளிகள் பாதி வழியிலேயே மரணமடைந்தார்கள். மீதி எஞ்சியிருந்த போராளிகளை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பினாங்கு தீவில் இறக்கிவிடப்பட்டு சிறை காவலில் வைத்தார்கள்.
இந்த தீவில் மேலும் சென்னை மற்றும் வட நாட்டிலிருந்து விடுதலைப்போரில் நேரடியாக பங்குபெற்று காரணத்திற்காகவும், மறைமுகமாக கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரித்த காரணத்தாலும் சுந்தரத்தாரான கிருஷ்ணா, சின்னையா, மராட்டிய மாநில ஆனந்தரங்கம், நெங்கா பண்டா, கரப்புவரிணி சுந்தரலிங்கம், சின்ன வீட்டு சாதபரமன் போன்ற பல போராளிகளை இங்கு அழைத்து வந்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார்கள்.
வரலாற்று ஆதாரங்கள்
புத்தகம் – south Indian rebellion
ஆசிரியர் – Dr.K.Rajayyan
பக்கம் – 271 – 275
புத்தகம் – மாவீரர் மருதுபாண்டியர்,
ஆசிரியர் – எஸ்.எம்.கமால்,
பக்கம் – 178 – 185.
புத்தகம் – எனது இராணுவ நினைவுகள்,
ஆசிரியர் – ஆங்கிலேயத் தளபதி கர்னல் வேல்ஸ்,
பக்கம் – 477, 478.