தர்மபுரி எம்பி செந்திலுக்கு சீட் மறுப்பு : ஹிந்துக்களை பார்த்து பயந்துவிட்டதா திமுக ?

தர்மபுரி எம்பி செந்திலுக்கு சீட் மறுப்பு : ஹிந்துக்களை பார்த்து பயந்துவிட்டதா திமுக ?

Share it if you like it

திமுக வேட்பாளர் பட்டியலை நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தர்மபுரி எம்பி செந்தில் குமாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். காங்கிரஸ் மட்டுமே வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிட்டது.

1‌ ) வடசென்னை – கலாநிதி வீராசாமி

2 ) தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

3 ) மத்திய சென்னை – தயாநிதி மாறன்

4 ) காஞ்சிபுரம் (தனி) – செல்வம்

5 ) அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

6) வேலூர் – கதிர் ஆனந்த்

7 ) தருமபுரி – அ.மணி

8 ) திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

9 ) சேலம் – செல்வ கணபதி

10 ) கள்ளக்குறிச்சி – மலையரசன்

11 ) நீலகிரி (தனி) – ஆ.ராசா

12 ) பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி

13 ) கோவை – கணபதி ராஜ்குமார்

14 ) தஞ்சாவூர் – ச.முரசொலி

15 ) தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

16 ) தென்காசி (தனி) – ராணி ஸ்ரீ குமார்

17 ) ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு

18 ) பெரம்பலூர் – அருண் நேரு

19 ) தேனி – தங்க தமிழ்செல்வன்

20 ) ஈரோடு – பிரகாஷ்

21 ) ஆரணி – தரணி வேந்தன்

சிட்டிங் எம்பி சீட் மறுப்பு: தருமபுரி சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு அ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தாலும், எதிர்கட்சிகளை வம்பு இழுப்பதிலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பதிலும் குறைவில்லாமல் இருந்தார் திமுக எம்பி செந்தில்குமார். குறிப்பாக, கடந்த வருடம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற பூமி பூஜையில், அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பூமி பூஜையில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனப் பேசி, அவர் நடந்து கொண்ட காணொளியானது பெரும் சர்ச்சையானது.

அதேபோல் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரின் போது ‘இந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் பொதுவாக கோமூத்திர மாநிலங்கள் என்று அழைப்போம். அங்கு நடக்கும் தேர்தல்களில் பாஜகவுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கிறது’ என பேசியதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபோல், அவ்வப்போது சர்ச்சையான பேச்சுக்களால் பேசுபொருளானது, திமுக தலைமைக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. அதுமட்டுமல்லாமல், கட்சி நிர்வாகிகளும் இவர் மீது அதிருப்தி தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முறை சிட்டிங் எம்பி செந்தில் குமாருக்கு சீட் என பலரும் நினைக்க, புதிய வேட்பாளரை அறிவித்துள்ளது திமுக தலைமை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்துக்கள் தர்மபுரி எம்பி செந்திலின் சர்ச்சைக்குரிய பேச்சினால் கோபமாக இருப்பார்கள். எனவே செந்திலுக்கு சீட் கொடுத்தால் கண்டிப்பாக தோற்றுவிடுவார் என்று பயந்துபோய்தான் புதிய ஒருவருக்கு சீட் கொடுத்திருக்கார் என்று கூறப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *