திட்டம் அதேதான்… பேருதான் வேற! தி.மு.க.வின் தில்லாலங்கடி

திட்டம் அதேதான்… பேருதான் வேற! தி.மு.க.வின் தில்லாலங்கடி

Share it if you like it

தமிழக அரசியல் நிலவரம், காமெடி நடிகர் வடிவேலு டயலாக் கதையாக சென்று கொண்டிருக்கிறது.

சென்னை – சேலம் இடையே பயண நேரத்தை குறைக்கும் வகையில், 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதற்காக 10,000 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது. இதையடுத்து, இத்திட்டத்துக்கான பணிகளை அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டது. இதற்கு சுமார் 1,900 ஏக்கர் நிலங்கள் தேவைப்பட்டன. ஆகவே, முதல் கட்டமாக விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளை அ.தி.மு.க. அரசு செய்தது. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டதில் குதிக்க வைத்தன. போலி போராளிகளும் களத்தில் குதித்து கம்பு சுற்றினர். தமிழகத்திலுள்ள சில அடிமை ஊடகங்களும், இதை ஊதிப் பெரிதாக்கின. உ.பி.ஸ் ஆதரவு நெட்டிசன்களும், சீக்கிரம் வந்து என்னத்தை கழட்டிவிடப் போகிறார்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. ஆதரவு உ.பி.ஸ் சிலர், 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, இத்திட்டத்துக்கு கோர்ட்டும் தடை விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில், உச்ச நீதிமன்றமும் தடை தொடரும் என்று அறிவித்து விட்டது. இதனால், 8 வழிச்சாலைத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த நிலையில்தான், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. இதனிடையே, 8 வழிச்சாலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. தி.மு.க.வும் இத்திட்டத்தை செயல்படுத்த இசைவு தெரிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, பணிகளை மீண்டும் தொடங்கி இருக்கிறது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்.

ஆனால், அஜித் பட பாணியில் கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்கிற கதையாக, 8 வழிச்சாலை என்கிற திட்டத்தை புதிய விரைவு சாலை என்று மாற்றி அறிவித்திருக்கிறார்கள். இதில், வேடிக்கை என்னவென்றால், இத்திட்டத்தை அ.தி.மு.க. அரசு கொண்டுவந்தபோது ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று ஏக அலப்பரை செய்த விவசாயிகளின் போர்வையில் இருந்த புலித்தோல் போற்றிய போலி போராளிகள், தற்போது கப்சிப் என்று இருப்பதுதான். இதைத்தான் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்.


Share it if you like it