விழுப்புரம், குடியாத்தம், திருவள்ளூர், மற்றும் தமிழகத்தில் 23 இடங்களில் தமிழக பக்கதர்கள் திருப்பதி மலையானுக்கு காணிக்கையாக நிலங்களை வழங்கியுள்ளனர். இச்சொத்துக்களை விற்க ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசு விற்க முயற்சி செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கர்நாடக பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா தனது ஆதங்கத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துக்களை விற்க ஆந்திர அரசு எடுத்த முடிவு மிகவும் இழிவானது. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று நாம் இறுதி வரை நாம் போராட வேண்டும் என்றும். அந்திர அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் வரை இந்த பிரச்சினையை எதிர்த்துப் போராட பவன் கல்யாண் மற்றும் பாஜக தலைமை முன் வர வேண்டும் என்றும்.
நீண்ட காலமாக உள்ள கோயில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து நாம் மீட்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது, திருப்பதி ஏழுமலையான் சொத்துக்களை வளைக்க கிறிஸ்துவ மிஷநரிகள் ஜெகன் மோகன் அரசினை தூண்டியுள்ளதாக, தற்பொழுது டிவி விவாதம் முதல் பல்வேறு ஹிந்து அமைப்புகள் தங்களின் கடும் கோபத்தை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.