நேற்றைய தினம் இச்செய்தியை மீடியான் தனது இணைய தளத்தில் வெளியிட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முஸ்லீம் மத குரு அஸ்லம் பாபா கொரோனா தொற்றில் பாதித்தவர்கள், தன் கையை முத்த மிட்டால் நோய் தொற்றில், இருந்து விடுபடலாம் என்று கூறியிருந்தார். கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி அன்று கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக மத குரு அஸ்லம் அகால மரணம் அடைந்ததோடு மட்டுமில்லாம் நோய் தொற்றையும் பரப்பிய அவலம் நிகழ்ந்துள்ளதாக கூறயிருந்தோதம்.
இதே செய்தியை சில ஊடகங்கள், மக்கள் மத்தியில் எப்படி கொண்டு சென்று உள்ளனர் என்பதை சில உதாரணங்களுடன் பார்க்கவும்.
பிரபல ஹிந்தி சேனல் ஆஜ் தக் இதே செய்தியை ஹிந்து சாமியாரின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. இதே தான் மற்றொரு பிரபல இணையதளமான நீயூஸ் டி யும் செய்துள்ளது.
இதே போல் தான் சில மாதங்களுக்கு முன்பு தந்தி டிவியும் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டு கொரோனாவுடன் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பியவர்களின் செய்தியை வெளியிடும் பொழுது ஹிந்து புகைப்படம் வெளியிட்டு மக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்த முயன்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிபா விவகாரத்திலும் இதே தான் நடந்தது. காவல்துறை விசாரணை மேற்கொள்ளும் முன்பே ஹிந்து ஆலயம், ஹிந்துக்கள் தான், என்று அனைத்து ஊடகங்கள், பத்திரிக்கைகள், நடிகர்கள், நடிகைகள், அலறினர். சமீபத்தில் டெல்லி கலவரத்தில் இதே அவலம் தான் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் ஹிந்துக்கள் என்றாலும், செய்தி ஊடகங்கள் ஹிந்துக்கள் தான் கலவரத்திற்கு காரணம் என்பது, போல் செய்திகளை வெளியிட்டு. ஹிந்து மதத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுத்த முயன்றனர். ஆனால் மீடியான் போன்ற பல ஊடகங்கள் உண்மை செய்தியை மக்களிடம் கூறி இந்த சதி திட்டத்தை முறியடித்தது.
மக்கள் விழிப்போடு இருந்து உண்மையான செய்தியினை படிக்க, பார்க்க வேண்டும் என்பதே இச்செய்தியின் நோக்கம்.