வாழும் நாட்டிற்கும், இந்திய ராணுவத்திற்கும் ஒவ்வொரு இந்தியரும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே நேர்மையான குடிமகனுக்கு பெருமை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. நாட்டிற்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
சில நேரங்களில் காவல்துறையும், உளவுத்துறை எச்சரிக்கை மூலம் தேசத்திற்கு தீங்கு இழைக்க துடிக்கும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கியும் வருகிறது இந்திய அரசு. இந்நிலையில் மேற்கு வங்கம் மலேயாபூர் பகுதியில் வசிக்கும் தானியா பர்வீன் என்னும் மாணவி பாகிஸ்தான் வாட்ஸ் ஆப் எண் வைத்திருந்தாக காவல்துறை கைது செய்தனர்.
அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது பர்வீனுக்கு லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய ராணுவ வீரர்களிடம் முகநூல், வாட்ஸ் ஆப், போன்றவற்றின் மூலம் நட்பை ஏற்படுத்தி கொண்டு. அவர்கள் மூலம் தகவல்களை திரட்ட முயன்றதாக காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது தேசிய புலனாய்வு முகமையினர் பர்வீனை விசாரணை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.