சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் அமெரிக்க கட்டுரையாளர் ரெனீ லின். யார் தவறு செய்தாலும் மிகவும் துணிச்சலாக அதிரடியாக கருத்து தெரிவிக்க கூடியவர். அண்மையில் தமிழகத்தை உலுக்கிய கன்னியாகுமரி சம்பவத்தில் தனது ஆதங்கத்தை இவ்வாறு கூறியிருந்தார்.
“தமிழ்நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி குறித்து பாலிவுட் நடிகர்கள், போலி நடுநிலைவாதிகள், பத்திரிகையாளருக்கு எனது பதில். பாலிவுட்டை புறக்கணிக்கவும், 1 ரூபாய் கூட வழங்காமல், அவர்களை வேலையில்லாமல் செய்யுங்கள். இந்தியாவில் 80% ஹிந்துக்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் இந்து கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள்!”
இந்நிலையில் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்து மதம் மதமாற்றம் செய்யவில்லை, ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த பாதையை தேர்வு செய்ய அனுமதிக்கிறது. எல்லா உயிரினங்களுக்கும் அன்பு மற்றும் மரியாதை பற்றிய நற்கருத்துக்களால் நான் இந்து மதத்தைத் தேர்ந்தெடுத்தேன். நான் ஒரு இந்துவாக இருக்கிறேன். ஒரு நாள் இந்து மதத்தின் போதனைகள் உலகத்தையே மாற்றும்.