ஜாதி, மதத்தை, ஒழிக்க வந்த இயக்கம் திக, திமுக, என்று அரை நூற்றாண்டுக்கு மேல் தங்களை வளப்படுத்தி கொண்டவர்கள் இவர்கள் என்பது ஒட்டு மொத்த தமிழக மக்களின் கடுமையான குற்றச்சாட்டாக உள்ளது. ஜாதியை ஒழிப்பேன் என்று கூறியே, ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது போன்ற கூத்துக்கள் இன்று வரை தொடர் கதையாக திராவிட ஆட்சியில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு. ஹச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பட்டியல் சமுதாய மக்களை அழைத்துக் கொண்டு ஆலயம் பிரவேசம் செய்தார் வைத்தியநாத ஐயர். உறுதுணையாக இருந்தார் முத்துராமலிங்கத் தேவர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஈ.வெ.ரா. இதுதான் திக திமுக வினரின் சமூகநீதி வெற்றிவேல்_வீரவேல்.
#வெற்றிவேல்_வீரவேல்#இந்துக்களின்_எதிரி_திமுக
சாதி வெறியை தூண்டிவிட்டு இந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் திமுகாவுக்கு சாவுமணி அடிப்போம். pic.twitter.com/yezZZgMZMM— தமிழ்மணி (@AeMfhrC62K1bLVY) July 19, 2020