சீன அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சமூக வலைத்தளம் Weibo. விளாடிவோஸ்டாக் துறைமுகம் தற்பொழுது ரஷ்ய நாட்டில் உள்ளது. வரலாற்று ரீதியில் அது சீனாவிற்கு சொந்தமான பகுதி என்று அச்சமூக வலைத்தளத்தில் கூறப்பட்டு இருந்தது. இதனை சீனாவின் வெளிநாட்டு அரசியல், பொருளாதார ஆய்வாளர், மற்றும் பத்திரிக்கையாளர், ஷேன் ஷிவே அண்மையில் வரவேற்று இருந்தது ரஷ்யர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
சீனாவின் கருத்து ரஷ்யாவிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருப்பதால். அந்நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக. சீனாவுக்கு எஸ் -400 ஏவுகணைகளை வழங்குவதை ரஷ்யா நிறுத்தி இருப்பது உலக நாடுகள் மத்தியிலும் ஜின்பிங்கிற்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Since China was claiming entire Vladivostok…..
Russia suspends deliveries of S-400 missiles to China….https://t.co/KtlUWAubHQ
— Research Wing (@ResearchWing) July 26, 2020