Share it if you like it
சந்தியான் 3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த செவ்வாய் கிழமையன்று, இஸ்ரோ தலைமை அலுவகத்தில் நடைபெற்றது. சந்திராயன் 2 திட்டத்தில் ஆர்பிட்டர் நல்ல நிலையில் செயல்பட்டவருவதால் அடுத்த திட்டத்தில் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப இஸ்ரோ கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. சந்திராயன் 2 செயல்திட்டத்தில் நிலவுக்கும் லேண்டருக்கும் 300 அடி தொலைவு இருந்தபோது பூமியுடன் தகவல் துண்டிக்கப்பட்டது. இதனால் இம்முறை லேண்டரின் பாகங்களை இன்னும் வலிமையாக உருவாக்க இஸ்ரோ முடிவுசெய்துள்ளது. அடுத்தாண்டு நவம்பர் மாதம் விண்கலனை ஏவ இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Share it if you like it