சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதசேத்தில் வன்முறை நிகழ்ந்தது. முதல்வர் யோகி ஆதியநாத் கலவரக்காரர்களிடம் இருந்து, நஷ்ட ஈட்டு தொகையை அதிரடியாக வசூல் செய்தார். அண்மையில் கர்நாடக மாநிலத்தில் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள், நிகழ்த்திய பேயாட்டத்தில் பல அப்பாவி மக்கள், மற்றும் பொது சொத்துக்களுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டது. யோகி அரசை முன்னுதாரணமாக கொண்டு கர்நாடக அரசு வன்முறையாளர்களிடம் நஷ்டஈட்டு தொகையை முழுமையாக வசூல் செய்ய முடிவு எடுத்துள்ளது.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற வன்முறையில் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு குற்றவாளிகளிடமிருந்து பெற கர்நாடகஅரசு முடிவு.ஆனால் தமிழகத்தில் ஆம்பூரில் நடந்த கலவரத்தில் இழப்பீடு ம.நே.ம.க.யிடமிருந்து வசூலிக்க நான் தொடர்ந்த வழக்கில் ஒப்புக்கொண்ட தமிழக அரசு இன்னமும் செயல் படுத்தவில்லை
— H Raja (@HRajaBJP) August 17, 2020