ஜூன் 15-ல் இந்திய மற்றும் சீன படையினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் 21-பேர் வீரமரணம் அடைந்தனர். உயிர் தியாகம் செய்தவர்களுக்கு உரிய ராணுவ மரியாதையை இந்தியா வழங்கியது.
ஆனால் சீன ராணுவ வீரர்களின் உயிர் இழப்பை, உலக நாடுகளிடம் இருந்து சீனா மறைத்து வந்தது. அண்மையில் சீன ராணுவ வீரர் ஒருவர். கல்வான் பள்ளத்தாக்கில் உயிர் இழந்தவர்களின் கல்லறை புகைப்படத்தை வெளியிட்டார். இது சீனா மட்டுமில்லாமல் உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது சென் சியாங்கிராங் என்பவரின் கல்லறை. சீன மக்கள் சுதந்திர படையின் 13 வது பிரிவை சேர்ந்தவர். டிசம்பர் 2001ல் பிறந்தவர். 2020 ஜூனில் இந்திய-சீன எல்லையில் நடந்த மோதலில் உயிர் தியாகம் செய்துள்ளார் என்று ஒருவரின் கல்லறையில் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது. 35-க்கும் அதிகமான கல்லறைகள் அந்த இடத்தில் இருப்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.