மனிதன் கண்டறிந்தவரையில் நான்கு விசைகள் மட்டுமே உள்ளன. அவை புவியீர்ப்பு விசை, மின்காந்தவிசை, வலிமையான அணுக்கருவிசை வலிமைகுறைந்த அணுக்கருவிசை. ஐந்தாவதாக ஒரு விசை இருப்பதாக கூறி அறிவியல் விற்பன்னர் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் தன் வாழ்நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார். எனினும் கடைசி வரையில் அவரால் ஐந்தாவது விசையை கணடறிய இயலவில்லை. இந்நிலையில் ஐந்தாவது விசை இருப்பதாகவும், நாங்கள் கிட்டத்தட்ட அதை நெருங்கிவிட்டதாகவும் ஹங்கேரியன் அறிவியல் கழகம் அறிவித்துள்ளது.
இதற்க்கு அவர்கள் X17 என பெயரிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேரண்டத்தில் உள்ள கரும்பொருளின் ஒருசிறு பகுதியே X17 ஆகும். ஐந்தாவது விசை போன்று ஆறு, ஏழு, எட்டு என விசைகள் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஹீலியம் அணுக்கருவானது சிதையும்போது ஒளிக்கதிரானது வெளிப்படுகிறது, அதில் இருக்கும் எலெக்ட்ரானும், பாசிட்ரானும் வெளிவருகின்றன. அதனை ஆராய்ந்தபோது கண்டறிந்தததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்தாவது ஒருவிசை இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.