இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ள கோத்த பைய ராஜபக்ஷே இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய பிரதமர் மோடி இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை புதிய அரசு பூர்த்தி செய்யுமென நம்புகிறேன்.மேலும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு சார்பாக மேலும் 14000 வீடுகள் கட்டித்தரப்படும்.இலங்கை பொருளாதார வளர்ச்சிக்காக 400 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்றும்.50 மில்லியன் டாலர் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கபடும் என்றும் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து இலங்கை அதிபர் பேசுகையில் இந்திய அரசிற்கு உறுதுணையாக என்றும் இலங்கை இருக்கும் என்றும், சிறைபிடிக்கபட்டுள்ள இந்திய மீனவர்களின் கப்பல்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.