தி மு க ஆட்சிக்காலத்தில் 2006-2009 வரை டாக்டர்.எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் டாக்டர். மீர் முஸ்த ஃபா உசைன். அவரின் பணிகாலத்தில் முறைகேடுகள் செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு தற்போது அவரை குற்றவாளி என்று அறிவித்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக இருந்தவர்கள் ஜெயிலிலோ அல்லது பெயிலிலோ இருக்க கூடிய சூழ்நிலை நிலவுகிற நிலையில், கல்வி கொள்ளையர்களின் கூடாரமாக இருக்கும் ஒட்டு மொத்த அமைப்பையே புதிய கல்வி கொள்கை மாற்றும் என்பதாலேயே அதை எதிர்க்கிறார்கள்.
எதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதை சொல்லவில்லை புதிய கல்வி கொள்கை. எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதை சொல்கிறது புதிய கல்வி கொள்கை.
ஏனென்று தெரிகிறதா? இவர்கள் யாரென்று புரிகிறதா? என பாஜகவை சேர்ந்த செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாராயணன் திருப்பதி பதிவு செய்துள்ளது உண்மை தான். சந்தேகமில்லை. அவருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்லாசிகள்.