Share it if you like it
அமைச்சர்களின் வரியை இனி அரசாங்கம் செலுத்தாது அதனை அமைச்சர்களே கட்டவேண்டும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டிலிருந்து அமைச்சர்களின் வரியை மாநில அரசே உத்திரபிரதேசத்தில் செலுத்தி வந்தது.
இது பொதுமக்களிடத்தே பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தது, தற்போது அந்நடைமுறை நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஆதியநாத் கூறியதாவது “நாட்டில் அனைவரும் சமமானவர்களே அனைவரும் வரிசெலுத்தினால் தான் நாடு வளர்ச்சியை நோக்கி செல்லும்” என தெரிவித்தார். அரசானது அமைச்சர்களுக்கு வரிசெலுத்தும் நடைமுறை நீக்கப்படும் என பா.ஜ.க தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it