சாதி தலைவர் இயேசு – சொல்லுது பைபிள் …!

சாதி தலைவர் இயேசு – சொல்லுது பைபிள் …!

Share it if you like it

கிறித்தவ மதத்தை பிரச்சாரம் செய்தவர்கள் உலகத்திலேயே கிறித்தவ மதம் தான் சிறந்த மதம் என்றும் உலக மக்களை துன்பங்களில் இருந்து காக்க வந்த ரட்சகர் இயேசு கிறிஸ்துதான் என்பது போலவும் அவர் தான் மெய்யான தேவன், உண்மையான கடவுள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் பைபிளை பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என முழுமையாக இரண்டையும் படிக்கும்போது யெகோவா, கர்த்தர், தேவன், ஆண்டவர் போன்ற பெயர்களால் பைபிளில் குறிப்பிடப்படும் கடவுள் ஒரு சாதிக்கு உரிய கடவுள் என அறிமுகப்படுத்தபடுகிறது. பைபிள் ஒரு குறிப்பிட்ட சாதி மக்களின் அரசியல் வரலாறு, சமூக வரலாறு மற்றும் பொருளாதார வரலாறு ஆகியவற்றை பேசுவதை அறியமுடிகிறது.

இஸ்ரவேலியர்கள் என்றொரு மக்கள் இனம் இவர்கள் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள ஆதாம் ஏவாளின் 20 ஆவது தலைமுறையில் தோன்றிய இஸ்ரவேல் என்கிறவனின் சந்ததிகள் தான் இஸ்ரவேலியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இஸ்ரவேலுக்கு பன்னிரண்டு மகன்கள் அவர்கள் மூலம் வந்த சந்ததிகள் பன்னிரண்டு இஸ்ரேலிய சாதிகள் என அழைக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு பையனின் சந்ததியும் ஒரு சாதி பைபிளை மொழிபெயர்த்தவர்கள் அது ஒரு சாதி நூல் என்று தெரியக்கூடாது என்பதற்காக கோத்ரம், குலம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். இந்த பன்னிரண்டு சாதிகளை தவிர பிற மக்களை புறசாதி, பிறஇனத்தார், வேற்று இனத்தார், அந்நியர் போன்ற வார்த்தைகளால் குறிப்பிட்டுள்ளனர்.  பைபிளில் கடவுள் பேசுகிறார் “நான் இஸ்ரேலியர்களில் வாசம்பண்ணி அவர்கக்ளுக்கே கடவுளாக இருப்பேன்” மற்றவர்களுக்கு கடவுளாக இருப்பேன் என்று அவர் அறிவிக்கவில்லை மற்றவர்களுக்கு கடவுளாக இருக்க அவர் விரும்பவில்லை. 

நான் இஸ்ரேலியருக்கு தான் கடவுளாக இருப்பேன் என்று யாத்ராமாம் விடுதலை பயணம் 29 வதுஅதிகாரம் 4 வது வசனத்தில் இந்த கூற்று இடம்பெற்றுள்ளது பழைய ஏற்பாடு ஏரோமிய 30 :2 இல் தேவன், ஆண்டவர், கடவுள், கர்த்தர் போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறார் 

இதில் குறிப்பிடப்படும் கடவுள் பெயர்கள் நாம் கடவுளுக்கான பொருளில் குறிப்பிடும் கடவுள் அல்ல. இந்த சொற்கள் பைபிளில் வந்தாலே ஒரு குறிப்பிட்ட சாதிக்கு உரிய கடவுள் என்று பொருள். அப்போது தான் நாம் பைபிளை புரிந்து கொள்ள இயலும். 

ஆனால் இன்றைய புரிதல் படி ஏசு உலக ரட்சகர் போல அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது அதற்கு பயன்பதுபடும் சொல் ‘கிறிஸ்து’ இந்த கிறிஸ்து என்பது கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்ட சொல்ஆகும். 

இந்த சொல்லை அறிமுகப்படுத்தியவர் பவுல் என்ற மாந்தர் இவர் ஏசுவை கண்ணால் கண்டதும் இல்லை, ஏசுவை பற்றி எதுவும் இவருக்கு தெரியாது ஏசு கிபி 31 இல் தம் 31 ஆம் வயதில் மரணம் அடைந்தார் என்ற செய்தி பைபிளில் இருக்கின்றது. அதற்க்கு மூன்றாண்டுகளுக்கு பின்னர் ஏசுவுக்கு எதிரி என கூறப்படும் மக்களில் ஒருவராக இருந்தார் பவுல் பின்னர் அவரும் மனம் மாறி ஏசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். 

ஏசு தான் மேசையா என்று யூதர்களிடத்தே பிரச்சாரம் செய்தார் ஏசு கூட தன்னை பற்றி யூதர்களிடத்தே மட்டுமே பிரச்சாம் செய்தார். ஏசு வின் மறைவுக்கு பின்னர் ஏசு வை பற்றி நம்மை போன்ற புறசாதியினரிடமும் எடுத்து செல்லவேண்டும் என விரும்பினார் பவுல். அப்போது அவருக்கு பயன்பட்ட சொல்தான் கிறிஸ்து இது புறசாதி மக்களிடையே ஏசுவை கொண்ட செல்ல உதவியது.  

அனால் ஏசு புறசாதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என பைபிள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசு என்ற பெயருக்கு முன்போ பின்னரோ கிறிஸ்து என்ற சொல் பயன்படுத்தபட்டு நம்மால் பிரித்தறிய முடியாமல் செய்யப்பட்டது. நாம் கிறிஸ்து ஆகப்போகிறோம் என்று ஏசுவுக்கு கூட தெரியாது. 

ஏசு ஒரு சாதிக்கு மட்டுமே உரிய கடவுள் என்றும் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கடவும் இருந்தார்கள் என்ற பட்டியல் பழைய ஏற்பாட்டில் உள்ளது. இஸ்ரேலியர்கள் கடவுளான கர்த்தர்  இஸ்ரேலியர்களை தவிர வேறு யாரும் வழிபட கூடாது. இது அந்த கடவுளுக்கே பிடிக்காது ஒரு புறசாதிக்காரன் அவரை வழிபட சென்றால் அவன் கொலை செய்யப்பட வேண்டும் என பைபிள் பேசுகின்றது. எண்ணாகமம் 3 அதிகாரம் 10 வசனம் இதை பற்றி கூறுகின்றது.

எனவே நாம் விரும்பினால் கூட பைபிளின் கடவுளை நாம் வழிபடுவதற்கு நமக்கு உரிமை இல்லை என பைபிள் கூறுகின்றது. பைபிளின் கடவுள் தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட சாதிக்கு மட்டுமே அவர் கடவுளாக இருப்பேன் என பிடிவாதமா இருக்கின்றார்.  

  -செண்பகபெருமாள் (பைபிள் ஆராய்ச்சியாளர் )


Share it if you like it