நேற்று சென்னை வந்திருந்த பிரதமர் மோடி சுமார் 8100 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார். அப்பொழுது மேடையில் பேசிய பிரதமர், ஒளவையாரின் வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோல் உயரும், என்ற வரிகளையும்.
மகாகவி பாரதியின் ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம், கல்விச்சாலைகள் வைப்போம் என்ற பாடலையும் மேற்கோள்காட்டி பேசினார் பிரதமர் மோடி. சுமார் 40 நிமிடம் பேசிய பிரதமர் தமிழ் இலக்கிய பாடல்கள் உட்பட கையில் எந்த வித குறிப்பும் இல்லாமல் பேசினார்.
இந்நிலையில் தமிழகத்தின் ஏதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து 10 வினாடிகள் கூட குறிப்பு இல்லாமல் பேச முடியாது. துண்டு சீட்டு கையில் இருந்தால் கூட அதைப்பார்த்து சரியாய் படிக்க தெரியாமல் கிராம சபை கூட்டங்களில் திணறுகிறார் ஆனால் குஜராத்தை பிறப்பிடமாக கொண்ட பிரதமர் மோடி எவ்வளவு அழகாக தமிழில் பேசுகிறார் என பொது மக்கள் கருத்துதெரிவித்து வருகின்றனர்.