பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா அவர்கள் அண்மையில் விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல் பற்றி இவ்வாறு கூறி இருந்தார்.
- 2 ஜி என்றால் முரசொலி மாறன், தயாநிதி மாறன்
- 3 ஜி என்றால் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி,
- 4 ஜி என்றால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி,
என மிக கடுமையாக தாக்கி பேசி இருந்தார். உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில். அமித்ஷா-வின் இந்த கருத்தின் மூலம் உதயநிதி பின் வாங்கி இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
எனக்கு பிறகு என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் எப்படி மக்களுக்கு வாக்குறுதி அளித்தாரோ. அதே போல இந்த கருத்தையும் நாம் எடுத்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
தெறிக்கவிடறதுனா இதான் pic.twitter.com/KmTnFQamQ7
— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) February 28, 2021