தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறல் பேச்சுக்கள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருவது ஒருபுறம் என்றால். தமிழகம் குறித்து எந்த விதமான புரிதல் மற்றும் புள்ளி விவரங்கள் கூட தெரியாமல்., மனம் போன போக்கில் இன்று வரை பேசி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பொது மக்களிடம் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் ; இந்த தொகுதி எம்.பி, மற்றும் எம்.எல்.ஏ-வை பார்த்து இருக்கிறீர்களா?
மக்கள் ; இல்லை..! இல்லை..!
ஸ்டாலின் ; எப்பொழுதாவது இவர்கள் தெருவிற்கு வந்து இருக்கிறார்களா?
மக்கள் ; இல்லை..! இல்லை..!
ஸ்டாலின் ; ஏதாவது இவர்கள் வேலை செய்தார்களா?
மக்கள் ; இல்லை..! இல்லை..!
மேடையில் அமர்ந்து இருந்த கார்த்தி, என்பவருக்கு கடும் அதிர்ச்சி காரணம். அவர் தான் தி.மு.க-வின் சிங்காநல்லூரின் சிட்டிங் எம்.எல்.ஏ. நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டணி கட்சியை சேர்ந்த பி.ஆர். நடராஜன். மக்களிடம் ஒட்டு கேட்க சென்ற இடத்தில் கூட்டணி கட்சி எம்.பி-யையும் தனது கட்சி எம்.எல்.ஏ-வையும் அவமதித்த சம்பவம் அடங்குவதற்குள்.
சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின். வீரபாண்டி தி.மு.க சட்டமன்ற வேட்பாளரின், பெயரை மறந்து விட்டு திணறிய உள்ளார் தி.மு.க தலைவர். அருகில் இருந்தவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு, அதன் பிறகு கூறியுள்ளார். ஸ்டாலினுக்கு ஏன்? இந்த வேண்டாத வேளை. கையில் எப்பொழுதும் துண்டு சீட்டு வைத்திருக்க வேண்டாமா? என்று நெட்டிசன்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.