அண்ணாமலையின் வளர்ச்சியையும், பா.ஜ.க-வின் எழுச்சியையும், பிடிக்காத தி.மு.க, வி.சி.க, மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தொடர்ந்து தவறான செய்திகளை மக்களிடம் பரப்பி பா.ஜ.க குறித்து பொய் பிம்பத்தை பரப்பி வருவது அனைவரும் அறிந்ததே.
அரவக்குறிச்சியில் அண்ணாமலை, வெற்றி பெற்று விடுவாரோ, என்கின்ற அச்சம் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளை, தூண்டி விட்டு மக்களிடம் ஒரு பதற்றத்தை உருவாக்க. தி.மு.கவினர் செய்த மிக கீழ்த்தரமான அரசியல் இது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.
இஸ்லாமியர்களுக்கு அதிகம் நன்மை செய்த கட்சி பா.ஜ.கவா அல்லது தி.மு.க கூட்டணியா என்று விவாதிப்போம். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி தொகுதியில், அதிக வாக்குகள் வாங்கி நான் காட்டுகிறேன். நேரம், இடத்தை, ஜமாத் தலைவர்கள் தீர்மானிக்கட்டும். அதீஸ் தெரிந்த, குரான் தெரிந்த, சுரா தெரிந்த, ஜமாத் தலைவர் என்னிடம் விவாதத்திற்கு நேரடியாக வரட்டும் என்று அண்ணாமலை அதிரடியாக அண்மையில் சவால் விடுத்தார்.
நேற்றைய தினம் இஸ்லாமிய மதகுருமார்கள் அதிரடியாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளனர். அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்கு கேட்டு பள்ளிவாசலுக்கு அல்லது முஸ்லிம் மஹல்லாக்களுக்கு யார் வருகை தந்தாலும். அவர்களிடம் கண்ணியமாக, நடந்து கொள்ளுமாறு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தங்களிடம் அன்புடன் கேடுட்டுக் கொள்கிறது.