தன் சொந்த முயற்சியில் வெற்றி பெறாத (தி)ல்லு (மு)ல்லு (க)ழகம்.
தி.மு.க வெற்றி பெற்றது எல்லாம் இவர்களது திராவிட கொள்கைக்கு கிடைத்த வெற்றியல்ல. ஒவ்வொரு சமயத்திலும் வெற்றிக்கு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கிறது.
1967- ல் காமராஜர் மீதும் காங்கிரஸ் மீதும், இருந்த வருத்தத்தால் தி.மு.க-வுடன் மூதறிஞர் ராஜாஜி அவர்களும் தேவரய்யா அவர்களும் கூட்டணி கொண்ட காரணத்தினால் திமுக வெற்றிபெற்றது.
1972 -ல் காங்கிரஸ் இரண்டாக உடைந்து இந்திரா காங்கிரஸ். தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தது. அந்த சமயம் 1971-ல் பங்களாதேஷ் யுத்தம். மன்னர் மானிய ஒழிப்பு வங்கி தேசிய மயம் போன்ற பிரச்சாரங்களில் இந்திராகாந்திக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக தி.மு.க வென்றது.
MGR தனிக்கட்சி துவக்கியதும், அவர் தன்னை இறை நம்பிக்கை உள்ளவராக வெளிப்படுத்திக் கொண்டார். பகிரங்கமாக கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்து தன்னை இறை நம்பிக்கை உள்ளவராக பிரகடனப்படுத்திக்கொண்டார்.
அதன்பிறகு MGR அவர்கள் உயிருடன் இருந்தவரை இறை நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நாத்திகச் சாக்கடை தி.மு.க-வை தோற்கடித்து அ.தி.மு.க-விற்கு ஆதரவளித்து வந்தனர்.
1989 -ல் அ.தி.மு.க பிளவுபட்டதால் தி.மு.க பலனடைந்தது. மீண்டும் இவர்களது நாத்திக் கொட்டம் துவங்கியது. ஆனால் 1991 – ல் கருணாநிதி வெற்றி பெறுவது கூட சிரமம் என்ற அளவில் தி.மு.க தோற்கடிக்கப்பட்டது.
1996 -ல் மன்னார்குடி மாஃபியா கும்பல் செய்த அட்டகாசத்தால் தி.மு.க-விற்கு வாய்ப்பு கிடைத்தது. 2006 – ல் விஜயகாந்த் அரசியல் விஜயத்தால் தொங்கு சட்டமன்றம் அமைந்தது. காங்கிரஸ் தயவில் தான் மைனாரிட்டி அரசாகவே தி.மு.க அரசு இருந்தது.
தமிழகத்தில் எப்பொழுதும் தி.மு.க-வின் திராவிட நாத்திக கொள்கைக்கு எதிராக வலுவான மக்கள் சக்தி உள்ளது. அதை உணர்ந்து யார் அதை பயன்படுத்தினாலும் மக்கள் அவர்களை ஆதரிக்கத் தயார். அதை தான் ஜெயலலிதா பயன்படுத்தி வந்தார்,
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அந்த மனநிலையை சிதறடிக்க தி.மு.க-வின் சதியின் மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில் பல போராட்டங்கள் நடைபெற்றன. அதன் மூலம் ஆட்சியை பிடிக்கும் கனவில் தி.மு.க-வினர் இருந்தனர்.
ஆனால் இறைவனது முடிவு வேறாக உள்ளது. கருப்பர் கூட்டத்தின் கந்தர் சஷ்டி கவச விமர்சனம், வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த கருத்து, தற்போது
ஆ. ராசவின் ஆபாச பேச்சு போன்ற இந்து விரோத போக்கினால் தி.மு.க கூடாரம் தற்பொழுது கலகலத்துப் போயுள்ளது.
இந்தத் தேர்தல் 50 ஆண்டுகளாக தங்களுக்கு அரசியல் ரீதியாக கிடைத்த செல்வாக்கை கொண்டு இந்துக்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு பதில் தரும் தருணமாக இந்துக்கள் உணரவேண்டும்..