முருங்கை கீரையை பொடி செய்து சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்.:
பொதுவாகவே முருங்கை மரம் மனிதர்களுக்கு எல்லாவிதமான ஆரோக்கியம் கொடுக்க வல்லது.
இது அனைவரின் வீட்டிலும் பரவலாகக் இருக்கின்ற மரமாகும்.
முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களையும் நாம் மருத்துவத்திற்கு பயன்படுத்த உகந்தவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முருங்கை கீரையில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் மினரல் மற்றும் அமினோ என்ற வேதிப் பொருட்களும் அதில் இருக்கிறது.
முருங்கைக் கீரையை பொடி செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட் பெரிதும் கிடைக்கின்றது மேலும் உடலில் உள்ள உயிரணுக்கள் செயல் இலக்க விடாமல் செய்ய கீரை உதவுகிறது.
மேலும் இந்தக் கீரையை சாப்பிட்டால் நாம் உடலில் மன அழுத்தம் மற்றும் வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
முருங்கைக் கீரையின் பொடியை பயன்படுத்துவதால் நம் உடலில் இருக்கும் கொழுப்புகள் மற்றும் குளுக்கோஸ் அளவை குறைக்கிறது.
முருங்கைக் கீரையின் பொடி செய்து பயன்படுத்தினால் நம் உடலில் ஏற்படும் அலர்ஜியை பெரிதும் தடுத்து உடலை பாதுகாக்கிறது.
முருங்கைக் கீரை வாரம் இருமுறை என்ன சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தி சீராக வைத்திருக்க உதவுகிறது.
முருங்கைக்கீரை மற்றும் முருங்கைப் பூக்கள் சாப்பிடுவதினால் நம் உடலில் இருக்கும் கல்லீரலை சுத்தம் செய்து பாதுகாக்கிறது.
உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முருங்கைக்கீரையை வாரம் இருமுறை என தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்..
முருங்கை மரம் நட்டவன் வெறு கையோடு தான் போவான் என்று தொன்று தொட்டு ஓர் பழமொழி வழக்கத்தில் உள்ளது. இதனை கற்பக விருஷசம் என்றும் கூறுவது உண்டு.
இதன் அர்த்தம்; முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மைமிக்கது இதனை ஒவ்வொரு மனிதனும் தன் உணவின் ஒர் அங்கமாக உட்கொண்டு வந்தால் அவன் வாழ்நாளில் கொம்பு ஊன்றாமல், நல்ல பார்வையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வான் என்பது திண்ணம்.