பிரபல நடிகர் ஆர்யா மீதான பணமோசடி வழக்கில், மேனேஜரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
ஜெர்மனி நாட்டின் குடியுரிமை பெற்ற வித்ஜா என்ற பெண்மணி, பாரதப் பிரதமர் மோடிக்கு கடந்த பிப்ரவரி 13- ம் தேதி அன்று. இ-மெயில் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஹீசைனி, முகம்மது அர்மான், உதவியுடன் நடிகர் ஆர்யா மற்றும் அவரின் அம்மா ஜமீலா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. தான் ஒரு பிரபல நடிகர் என்று அறிமுகம் செய்து கொண்டார் ஆர்யா. அவரின் தாயார் ஜமீலாவும் தன்னிடம் நெருங்கிப் பழகினார். ஒரு கட்டத்தில் ஆர்யா தன்னை காதலிப்பதாக கூறினார். அவரின் பேச்சை நம்பி, தானும் அவரை காதலிக்க தொடங்கினேன்.
ஆர்யா மற்றும் அவரது தாய் தன்னிடம், குடும்ப நிதிநிலை பற்றி கூறி. பண உதவி கேட்டனர். அக்குடும்பத்தில் தானும் ஒருத்தி என்றும், வருங்கால மருமகள் என்று தன்னிடம் ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பி, நான் ஆர்யாவிற்கு 80 ஆயிரம் யூரோ ( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 70.5 லட்சம்) வரை பணம் அனுப்பி வைத்தேன். பொய்யான வாக்குறுதியை நம்பி அவர்களிடம் நான் ஏமாற்றம் அடைந்தேன்.
இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா, ’ஷாயீஷா’ என்ற வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான செய்தியை கேள்விப்பட்டு. நான் மோசம் போனதை உணர்ந்து கொண்டேன். தன்னை ஏமாற்றி பணம் பறித்த நடிகர் ஆர்யா, அவரின் தாய் உள்ளிட்ட நான்கு பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த இ-மெயில் குறிப்பிட்டு இருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில், ஆர்யாவின் மேனேஜர் முகம்மது அர்மான், சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர் மீதான புகார் சைபர் கிரைமிலிருந்து, சிபி-சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது புகார்தாரர் வித்ஜா. சார்பில் வழக்கறிஞர் பி. ஆனந்தன் ஆஜராகி, அர்மானுக்கு முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இதனை அடுத்து ஆர்யாவின் மேனேஜர் அர்மானின், முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.