கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கவும். நாகர்கோவில் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும். முக்கடல் நீர்த்தேக்கத்தை அண்மையில் பார்வையிட்டது வரை. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இன்று வரை மிக தீவிரமாக பணியாற்றி வருகிறார் எம்.ஆர். காந்தி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
நாகர்கோவில் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காக இஸ்ரோ தலைவர் சிவனிடம். அண்மையில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி கோரிக்கை வைத்து இருந்தார். இதற்கு இஸ்ரோ மகேந்திரகிரி நிறுவனம் உடனடியாக, ஆக்சிஜன் கிடைப்பதற்கான வழி வகைகள் செய்யும் என்று உறுதி அளித்து இருந்தது. இதனை அடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதற்கு வழிவகை செய்த இஸ்ரோ நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து உள்ளார் எம்.ஆர்.காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
என்னுடைய கோரிக்கையை ஏற்று ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அதிகப்படியான ஆக்சிஜன் சப்ளை வழங்க ஒத்துக்கொண்ட இஸ்ரோ தலைவர் திரு.சிவன் அவர்களுக்கும் ,இஸ்ரோ மகேந்ததிரகிரி நிர்வாகத்துக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
— M R Gandhi (@MRGandhiNGL) May 7, 2021