ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதற்கு ஓங்கோல் அருகே உள்ள அவரின் மூதாதையர்கள் கொண்டாட்டம்..!

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதற்கு ஓங்கோல் அருகே உள்ள அவரின் மூதாதையர்கள் கொண்டாட்டம்..!

Share it if you like it

ஸ்டாலின் தமிழக முதல்வராக, பதவியேற்று கொண்டதை. ஆந்திராவில், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே உள்ள செருவு கொம்மபாளையம் கிராமத்தில் பேனர், தோரணங்கள் கட்டி, அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வருலு இவ்வாறு கூறியுள்ளார்.

ஆந்திரா, தமிழகம், ஒன்றாக இருந்த சமயத்தில். பல மன்னர்கள் இப்பகுதிகளை ஆண்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூதாதையர்கள் (தாத்தா) இந்த கால கட்டத்தில் விஜயநகர மன்னர்களின் அரசவையில் வித்வான்களாக பணியாற்றியுள்ளனர்.

அங்கிருந்து ஓங்கோல் அருகே இருந்த பெள்ளூரு சமஸ்தானத்தில் இவர்களது மூதாதையர்கள் நாதஸ்வர வித்வான்களாக வெங்கடகிரி அரசரிடம் பணி யாற்றினர். அப்போது, இவர்களின் வம்சாவளியினருக்கு பெள்ளூரு சமஸ்தானம் சார்பில் 5 குடும்பத் தாருக்கு தலா 30 ஏக்கர் நிலம் என மொத்தம் 150 ஏக்கர் நிலம் மானியமாக வழங்கப்பட்டது. இதில் அவர்கள் விவசாயம் செய்து வந்தனர். வறட்சி நிலவிய போது, நிலங்களை விற்று விட்டு இவர்கள் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இப்போது கூட இவர்களுடைய மூதாதையரின் குடும்பத்தார் இங்கு வசிக்கின்றனர்.

கடந்த 1960-ம் ஆண்டு, கருணாநிதி ஆந்திராவின் ஏலூருக்கு வந்தார். டிடெக்டிவ் நாவலாசிரியர்கள் சங்க கூட்டத்தில் கருணாநிதி தலைமையேற்க வந்தார். அப்போது அவர் தமது மூதாதையர் வாழ்ந்த ஊரான செருவு கொம்மபாளையம் குறித்தும், அங்குள்ள வம்சாவளியினர் குறித்தும், இப்போது வசித்து வருபவர்கள் குறித்தும் ஆர்வத்தோடு கேட்டறிந்தார் என ஜலந்தர் பாலகிருஷ்ணா எனும் நாவலாசிரியர் கூறியதாக இந்து தமிழ் நாளிதல் செய்தி வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it