ரயில்வே துறையை வைத்து கலக்கும் மத்திய அரசு – ஒரே நாளில் 1000 மெ.டன் ஆக்ஸிஜன்..!

ரயில்வே துறையை வைத்து கலக்கும் மத்திய அரசு – ஒரே நாளில் 1000 மெ.டன் ஆக்ஸிஜன்..!

Share it if you like it

நாட்டில் ஆக்சிஜன் தேவை அதிகரித்த உடன் ரயில்வே துறையை களமிறக்கி ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தேவை உள்ள மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பியது மத்திய அரசு. அவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆனால் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 1,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே, 175 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம், 675 டேங்கர்களில் 11,030 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு வினியோகித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Share it if you like it