தி.மு.க, இடதுசாரிகள், பற்றி பாடப் புத்தகத்தில் தவறான கருத்து கடும் நடவடிக்கை எடுப்போம்..! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பற்றி அமைச்சரின் நிலைப்பாடு என்ன? 

தி.மு.க, இடதுசாரிகள், பற்றி பாடப் புத்தகத்தில் தவறான கருத்து கடும் நடவடிக்கை எடுப்போம்..! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பற்றி அமைச்சரின் நிலைப்பாடு என்ன? 

Share it if you like it

தி.மு.க மற்றும் இடதுசாரிகள், குறித்து பல்கலை கழகப் பாடப் புத்தகத்தில் தவறான கருத்துகள் இடம் பெற்று உள்ளன. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்ட சில புள்ளி விவரங்களை பாடப் புத்தகத்தில் இருந்து பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் படித்து காண்பித்து உள்ளார் அவர் கூறியதாவது.

இந்திய கட்சிகள் குறிப்பாக மதங்களுக்கு எதிரான தி.மு.க, பொதுவுடைமைக் கட்சிகள் மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றி வருகின்றன. அந்தக் கட்சிகள் அந்த மக்களை தேசியப் பாதையில் கலந்துவிடாமல் தடுக்கின்றன. அவை கண்மூடித்தனமாகச் சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன. என்று அச்சிடப்பட்டுள்ளது. இது சமூக அறிவியல் வரலாறு பாடப் புத்தகத்தில் வரவேண்டிய பாடமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என யுனெஸ்கோ பட்டம் வழங்கி உள்ளது தவறான தகவல் எனப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கோரி வழக்கு. தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தக குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஈ.வெ.ரா குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதே அது பற்றி அமைச்சரின் நிலைப்பாடு என்ன? எப்பொழுது ஈ.வெ.ரா குறித்த தவறான தகவல்கள் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்று ஒரு நேர்மையான  பத்திரிக்கையாளராவது கேட்டார்களா, என்பது மில்லியன் டாலர் கேள்வி?  ராசியப்பன் பாத்திக்கடை (யுனெஸ்கோ) விருது குறித்து எப்பொழுது அமைச்சர் வாய் திறப்பார் என்று நெட்டிசன்கள் கேள்வி? எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it