Share it if you like it
டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காற்றின் தரம் 314 ஆக உள்ளது என்று காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (சஃபர்) தெரிவித்துள்ளது.
காற்றின் தரம் மதுரா சாலையில் 338 ஆக உள்ளது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் 328, டெல்லி பல்கலைக்கழகம் 317, திர்பூர் 316, அயனகர் 310, சாந்தினி சவுக் மற்றும் லோதி சாலை 309, ஐ.ஐ.டி-டெல்லி 302, மற்றும் பூசா 272, குருகிராமில் 317 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காற்றின் தரக்குறியீடு
0-50 க்கு இடையில் – நல்லது
51-100க்கு இடையில் திருப்திகரமானது
101-200 க்கு இடையில் மிதமானது
201-300 க்கு இடையில் மோசம்
301-400க்கு இடையில் மிக மோசம்
401-500 ‘கடுமையானது’ என்று குறிக்கப்பட்டுள்ளது. 500-க்கு மேல் ‘கடுமையான பிளஸ்’ பிரிவில் வருகிறது.
Share it if you like it