பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நித்தின் கட்கரி, நாக்பூரில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாக சென்றும் இஸ்லாமிய அமைப்புகளை சந்தித்தும். அவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி எடுத்து கூறியும் அதில் உள்ள சாதகமான விஷயங்களை விளக்கியும் சட்ட விரோத கும்பல்களுக்கு தான் இச்சட்டத்தால் பாதிப்பு என்றும்.
அதனால் எந்த ஒரு குடிமகனுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று வாக்குறுதி அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது எதிர்க்கட்சிகள் மக்களை குழப்பி வருகிறது, அவர்கள் மக்களிடம் பொய் செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.
பால்தாக்கரே சட்ட விரோதமாக உள்ளே நுழைபவர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் சிவசேனா கட்சியின் முதல்வரோ அவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவர்கள் கூட்டணி கட்சியில் ஒற்றுமையே இல்லை. இவர்கள் ஆட்சியில் நீடிப்பது கடினம் இவ்வாறு கூறியுள்ளார்.