Share it if you like it
2003ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுவதாக ராணுவத்தளபதி நரவனே கூறியுள்ளார்,
இந்தியா – பாகிஸ்தான் ராணுவங்கள், கடந்த பிப்., 25-ல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதாக அறிவித்தன. அதன் படி எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக எந்தவொரு அத்துமீறலிலும் பாக்., ராணுவம் ஈடுபடவில்லை.
இதனால் ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில் அமைதியான சூழல் நிலவுவதாகவும். நாட்டின் எல்லைகளில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவுவதால் மக்களிடம் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் தங்கள் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை பாக்., அழித்ததாக தெரியவில்லை. என நம் ராணுவத் தளபதி நரவானே கூறியுள்ளார்.
Share it if you like it