தேவாலயங்களில் பெண் பாதிரியார்களை நியமனம் செய்ய விடமாட்டோம் கிறிஸ்தவ மதபோதகர் பரபரப்பு கருத்து..!

தேவாலயங்களில் பெண் பாதிரியார்களை நியமனம் செய்ய விடமாட்டோம் கிறிஸ்தவ மதபோதகர் பரபரப்பு கருத்து..!

Share it if you like it

தனது தோல்வியை மறைக்கவும், மற்றவர்கள் செய்த சேவையில் ஸ்டிக்கர் ஒட்டி அதில் அரசியல் விளம்பரம் தேடவும், இன்று வரை  தி.மு.க அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தினால், வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்த. ஏழை, எளியவர்களின், கனவில் தி.மு.க அரசு மண் அள்ளி போட்டுள்ளது என்பது நிதர்சனம்.

மக்களின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு., அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகவும், அர்ச்சகர் ஆக வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை, மேற்க்கொள்ளும் என்று விடியல் அரசு அண்மையில் கூறியிருந்தது.

இதே போன்ற நடவடிக்கையை கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் தி.மு.க அரசு மேற்கொள்ள வேண்டும், என்று பலர் கருத்து கூறி வரும் நிலையில்.  பெண்களை பாதிரியார்களாக தேவாலயங்களில், நியமனம் செய்ய முடியாது என்று பாதிரியார் ஒருவர் பேசிய காணொளி, ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it