தமிழக அரசின் தலைமையில் நீட் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைப்பு.
கல்வி ஆலோசகர்கள், கல்வி நிபுணர்களின், ஆலோசனையை பெற்று மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்தது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்விற்கு ஆதரவாக இருக்கும் சமயத்தில். தமிழகம் மட்டுமே நீட் தேர்விற்கு இன்று வரை கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வில் உள்ள சாதக, பாதகங்கள், குறித்து ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றினை தி.மு.க அரசு அமைத்துள்ளது.
இதனை தொடர்ந்து நீதிபதி தலைமையில் சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதன்பின் பத்திரிக்கையாளர்களை, சந்தித்த நீதிபதி ஏ.கே.ராஜன். செய்தியாளர்களை சந்தித்த பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
நீட் தேர்வில் பாதிப்பு இருப்பதால் தான் அரசு குழு அமைத்திருக்கிறது. எவ்வளவு தூரம் பாதிப்பு என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம். பாதிப்பு இருக்கு என்பது எல்லோரின் கருத்து தான், இன்னும் Data முழுமையாக கைக்கு வரவில்லை ஆனால் நீட் தேர்வால் பாதிப்பு என்று ஒய்வு பெற்ற நீதிபதி கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் குழப்பத்தையும், சந்தேகத்தையும், ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் கைக்கு Data வரவில்லை ஆனால் நீட் தேர்வால் பாதிப்பு இருப்பது உண்மை தான் என்று ஆராய்வதற்கு முன்பே தெரிவித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன். pic.twitter.com/KOTE9G22j2
— Krishna Kumar Murugan (@ikkmurugan) June 14, 2021