தமிழக அரசியலில் தன்னலமற்ற சேவகன் மாண்புமிகு கக்கன். மதுரை மாவட்டம், தும்பைப்பட்டியில் பிறந்த வெள்ளை மனது கொண்ட கருப்பு சிங்கம் கக்கன் அவர்கள் இந்திய விடுதலை போரில் பங்கு கொண்டு 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். 1957 முதல் 67 வரை பல்வேறு துறை சார்ந்த அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டவர் கக்கன்.
அவரது காலத்தில் தான் வைகை அணை கட்டப்பட்டது. அப்போது அவர் பொது பனி துறை பொறுப்பும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். காமராஜரை போலவே கக்கனும் பந்தபாசங்களை துறந்து தனது ஆட்சி அதிகாரத்தை சுயநலத்துக்காக பயன்படுத்தியது கிடையாது. அவர் மிகவும் நேர்மையானவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை கூறலாம்.
ஒரு முறை தனது சகோதரர் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் பனி செய்ய விருப்பம் ஏற்பட்டு. அவரது உடல் தகுதியை உயர்த்திக்கொண்டு காவல்துறை தேர்வெழுதினார். விஸ்வநாதனுக்கு நன்றாக தெரியும் நமக்கு அண்ணன் கக்கன் சிபாரிசு செய்யமாட்டார் என்று. எனவே நன்றாக பயிற்சி பெற்று தேர்வெழுதி நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றிபெற்று. பணியமன ஆணையும் வாங்கிவிட்டார். அப்போது காவல்துறை மந்திரியாக இருந்த கக்கன் காதுக்கு செய்தி எட்டியதும். இவ்விகாரம் வெளியில் தெரிந்தால் மற்றவர்களும் தன் உறவினர்களுக்கு லாபம் ஏற்பட தன் அதிகாரத்தை பயன்படுத்துவர் என்பதால், உடனடியாக அவர் பனி நியமன ஆணையை ரத்து செய்ய உத்தரவிட்டார். அப்பேற்பட்ட மஹானின் பிறந்த தினமான இன்று அவரை போற்றி வணங்குவோம்.
வீர உமாசங்கர்