சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்பொழுதைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு சேலம் மாவட்ட பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தி.மு.க ஊடகங்கள் மற்றும் அதன் துணை ஊடகங்கள் வரை மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது.
8 வழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணி தொடர்பாக அப்பொழுதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியிருந்தார்.
சென்னை- சேலம் எட்டு வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்தை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயிகள், பாரம்பரியமாகத் தங்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான விளைநிலங்கள் பறிபோகின்றனவே என்று மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எங்களைக் கொன்றுவிட்டு எங்களின் பிணங்கள் மீது நடந்து சென்று விளைநிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கதறிக் கண்ணீர் சிந்தியவாறு ஆவேசமாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றி தமிழக அரசு சிறிதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், காவல்துறையை துணைக்கு வைத்துக் கொண்டு நில அளவை செய்து விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றிச் செல்வது அங்குள்ள விவசாயிகளுக்கு ஆத்திரத்தையும் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. எட்டு வழிச் சாலை அமைப்பதால் எட்டு ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்படும்; ஐநூறு ஏக்கர் வனப்பகுதியை அழிக்க வேண்டியதிருக்கும்
முதல்வரின் எண்ணம் எட்டு மலைகளை அழிக்க வேண்டியதிருக்கும் என்றெல்லாம் அங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் எல்லாம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுப் போராடும் வேளையில், அவர்களின் கவலைகளையும், கருத்துகளையும் பொறுமையாகக் கேட்டறியாமல், எப்படியும் நிறைவேற்றியே தீருவேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதிக்க எண்ணத்துடன் அதீத ஆர்வமும் அளவில்லா வேகமும் காட்டுவதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அண்மையில் பாரதப் பிரதமர் மோடியை சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் 8-வழிச்சாலையின் பெயரை மாற்றி பசுமைவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவை வழங்கி இருக்கும் சிக்ஸர் முதல்வரை பலரும் வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதராம் (15 இ)