11 மணிக்கு முதல்வராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05-க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான் என்ற பொன்மொழிக்கு சொந்தகாரரும் தற்பொழுதைய மின்சார துறை அமைச்சரான ’செந்தில் பாலாஜி’ அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போன்ற நேரத்தில் தான் மின் தடை ஏற்படும் என்று கூறியுள்ளார். இந்த உலகத்திலேயே இப்படி ஒரு விளக்கத்தை யாரும் கொடுக்க மாட்டார்கள் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.
எறும்பு, எலிகள், பூரான், அதிகம் செல்வதால் தான் தமிழக சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சொன்னாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1407138538047508482