மயிலாடுதுறை: கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு அனந்தமங்கலம் கோவிலில் ராமர், லக்ஷ்மணர், சீதை, அனுமன் சிலைகள் திருடப்பட்டது. பின்னர் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள இந்தியா பிரைடு நிறுவனத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லண்டனில் உள்ள இந்திய கலைப்பொருள் சேகரிப்பாளரிடம் இருந்து ராமர், லக்ஷ்மணர், சீதை சிலைகள் மீட்கப்பட்டன.அனுமன் சிலை மட்டும் கிடைக்கவில்லை.
தற்போது அனுமன் சிலை சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியத்தில் இருப்பதை இந்தியா பிரைடு நிறுவனம் கண்டறிந்துள்ளனர்.அனுமன் சிலையை புதுவை ஆவண காப்பகத்தில் உள்ள புகை படத்தை ஒப்பிட்டு பார்த்தபோது அனந்தமங்கலம் கோவிலில் திருப்பட்ட அனுமன் சிலை என உறுதியானது.இந்த சிலையை விரைவில் மீட்பதற்காக இந்திய வெளிஉறவுத்துறை துணையோடு சிலை கடத்தல் மீட்பு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.