கொரோன எனும் நோய் தொற்று கடந்த 1 வருடங்களாக பரவி நம்மை அனைவரையும் வாட்டிவதைக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 6 மாதங்களாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி படிப்படியாக பரவலை மத்திய அரசு கட்டுக்குள் வைத்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மத்திய அரசை விமர்சித்து கொண்டே வந்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில் அடிப்படை ஆதாரமற்ற பல தகவல்களை பதிவிட்டு வருகிறார். நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஜூலை மாதம் வந்துவிட்டது, தடுப்பூசி இன்னும் வரவில்லை, தடுப்பூசி எங்கே?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் “ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நேற்றுதான் செய்தி வெளியிட்டேன். இதில் தனியார் மருத்துவமனைகளுக்கு தனியாக விநியோகம் செய்யப்படுவதைத் தவிர்த்து ஜூலை மாதம் 12 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என்று 15 நாட்களுக்கு முன்னரே மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற அற்பமான அரசியல் செய்துவருவது சரியானது அல்ல என்று ராகுல் காந்தி புரிந்து கொள்ளவேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.