சோனியா குடும்பத்திற்கு எதிர்பார்த்த கமிஷன் கிடைக்கவில்லை – சம்பித் பத்ரா பாய்ச்சல்..!

சோனியா குடும்பத்திற்கு எதிர்பார்த்த கமிஷன் கிடைக்கவில்லை – சம்பித் பத்ரா பாய்ச்சல்..!

Share it if you like it

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை மோடி அரசு கொள்முதல் செய்தது. இந்த  கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக வழக்கம் போல அதே கதையை காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதற்கு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இவ்வாறு கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது, இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க ஏன்? நினைக்கவில்லை. அப்போது ஏன்? ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவில்லை. ஏனென்றால், சோனியா குடும்பத்தாருக்கு தாங்கள் எதிர்பார்த்த கமிஷன் கிடைக்கவில்லை.
பிரதமர் மோடியை அவமானப்படுத்தும் நோக்கில் தற்பொழுது இறங்கியுள்ளது. பிரதமர் மோடியின் தோற்றத்தையும், அவரின் தாடியையும் கிண்டல் செய்து வருகிறது.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரங்களில் உள்ள நடைமுறைகளையும், ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்த தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகம், உச்ச நீதிமன்றம், நற்சான்று அளி்த்துள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Share it if you like it