ஜாதியின் பெயரால் பிரிக்கப் பார்க்கிறதா தமிழக அரசு!

ஜாதியின் பெயரால் பிரிக்கப் பார்க்கிறதா தமிழக அரசு!

Share it if you like it

நமது பாரத நாட்டின் பண்டைய காலத்திலிருந்து சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவையும், தானத்திலும், தர்மத்திலும், சத்தியத்தின் வழியாக மக்கள் இன்றுவரை வாழந்து கொண்டிருக்கறார்கள்.

பண்டைய காலத்தில் மக்களுக்குள் எந்தவித ஏற்றதாழ்வு பிரிவு இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமை¬யாக வாழ்ந்துள்ளனர். இதற்கு உதாரணம் இறைவனே பூலோகத்தில் அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து பல நல்ல கருத்துக்களை நமக்கு ஆதாரங்களாக விட்டுச் சென்றுள்ளனர். இந்த கருத்தை பின்பற்றியே மக்கள் இந்து தர்மத்தின் வழியாக வாழ்ந்தார்கள்.

ஆங்கிலேயன் வருகைக்குப் பிறகுதான் இதில் மாற்றம் ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளுவதற்காக நம்மிடையே இந்த இனப் பிரிவு என்ற சூழ்ச்சியைக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காய்ந்தார்கள். இந்த சூழ்ச்சியில் நாம் அகப்பட்டு நமக்குள்ளே பாகுபாடு, ஏற்றத்தாழ்வு பார்க்க நேர்ந்தது.

இதனை சரிசெய்ய நம் பாரத நாட்டில் பல மகான்கள் மற்றும் தியாகிகள் தோன்றி மக்களுக்குள் புகுத்திய இந்த விஷத்தை அறுத்து எறிந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஏற்றத்தாழ்வு குறைய ஆரம்பித்தது. ஆனாலும் இன்னும் சில விஷமக்காரர்கள் இருக்கறார்கள். இந்த ஆட்களைப் பயன்படுத்தி மற்ற நாட்டினர் அமைதி பூங்கவாக இருக்கக் கூடிய நமது பாரத நாட்டின் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களின் முதல் திட்டம் இந்தியாவைப் பிரிக்கவேண்டும் என்பதும் இரண்டாவது திட்டம் இந்து தர்மத்தை அழிக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய குறிக்கோளாகும். அதற்கு நம் நாட்டில் இருக்கும் நம் மக்களையே விஷச் செடியாக மாற்றி நமக்கு எதிராக திருப்பும் வேலையை துல்லியமாக செய்து வருகிறார்கள். நாம் இதனை அறியாமல் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்.

அமைதியாக ஒற்றுமையாக இருக்கின்ற நமது இந்து மதத்தில் குழப்பத்தை ஏற்படும் விதமாக பல செயல்களை செய்து வருகிறார்கள். இங்கு இருக்கக் கூடிய அனைத்துக் கோயில்களிலும் எல்லா சமூகத்தை சார்ந்தவர்களும் அர்ச்சகர்களாகவே உள்ளனர். இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டம் மக்கள் மத்தியில் கொண்டுவருவது நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த சட்டம் ஏற்கனவே அமுலில் நடந்துக்கொண்டுதான் வருகிறது. ஆனால் சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக ஒற்றுமையாக இருக்கக்கூடிய மக்களை பிரிவினையின் மூலம் பிரிக்க பல சதிகள் செய்துவருகிறார்கள்.

அவர்களுக்கு இந்த பதிவின் வாயிலாக நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் நாங்கள் வழிபடும் இந்து ஆலயங்களில் யார் அர்ச்சகராக வேண்டும் என்பதை இந்துக்களான இந்து தர்மத்தின் வழியே நடக்கும் நாங்கள் தீர்மானித்துக் கொள்கிறோம். தெய்வப்பக்தியே இல்லாத தெய்வத்தை நிந்திக்கும் நாத்திகவாதியான நீங்கள் ஏன் இதற்கு கவலைப்பட்டு கருத்துக் கூறுகிறீர்கள்.

தாங்கள் எத்தனை கோயிலுக்கு சென்று பார்த்துள்ளீர்கள்?
நீங்கள் அந்த கோயிலுக்குச் சென்று அங்கு அர்ச்சகராக இருப்பவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்று ஆராயந்து துல்லியமாக மக்கள் மத்தியில் உங்களால் கூற முடியுமா? எங்களால் கூற முடியும். தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினர் அர்ச்சகராக இருக்கிற கோயில்களை இந்த பதிவில் நாங்கள் ஒவ்வொரு கோயிலாக கூறுகிறோம் என்பதை ஆணித்தனமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த சட்டத்தை இந்து ஆலயங்களில் அமுல்படுத்த துடிக்கும் தாங்கள் மற்ற மதத்தில் இந்த சட்டத்தை அமுல்படுத்த தயங்குவது ஏன்? அதற்கு ஏதாவது தடை உள்ளதா? நீங்கள் கூறுவதுபோல இந்து தர்மத்திலும் இந்து ஆலயத்திலும் இனப் பிரிவு இருந்தால் “இராமாயணத்தை எழுதிய கள்வர் சமூகத்தைச் சேர்ந்த வால்மீகியை அனைத்து ஹிந்துக்களும் ஒரேமாதிரியாக பூஜிக்கின்றனர். மகாபாரதத்தை எழுதிய மீனவர் சமூகத்தை சேர்ந்த வியாசரை அனைத்து ஹிந்துக்களும் ஒரேமாதிரியாக பூஜிக்கின்றனர்”. 63 நாயன்மார்களின் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர்..? 12 ஆழ்வார்களில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர் என்று தெரியுமா உங்களுக்கு..?

கோவில்களில் பூஜை செய்பவர்களின் குலம், கோத்திரம், ஜாதி என பிரிவினைப் பார்த்து இறைவனை வணங்கும் வழக்கம் ஹிந்துக்களுக்கு இல்லை. அதனை திணிக்க முயற்சிக்காதீர்கள்.

நன்றி..!
ஓம் நமச்சிவாய


Share it if you like it