தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி”
மாணிக்கவாசகரின் இந்த பாடலில் இருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் சிவன் என்பவர் ஒரு ஜோதி ஸ்வரூபம். ஒவ்வொரு உயிர்களுக்கு உள்ளே ஒரு ஜோதி உள்ளது. அந்த ஜோதியை தான் நாம் சிவன் என்கிறோம். ஒவ்வொரு உயிரிலும் ஆன்மா உள்ளது அந்த ஆன்மா உடலை விட்டு பிரியும் போது அந்த ஆன்மா எங்கு சென்றது என்பது யாருக்கும் தெரியாது அந்த சூட்சமத்தை தான் நாம் சிவன் என்கிறோம். அப்படியிருக்க இறைவனால் படைக்கப்பட்ட நம்மிடையே இனபிரிவினை ஏற்படுவது எப்படி தோன்றியது.
நாம் ஒற்றுமையாக இருந்து நமது ஹிந்து தர்மத்தை இந்த உலகிற்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை அல்லவா வெளிநாட்டவர் நமது இந்து தர்மத்தை நன்கு அறிந்து அவன் துல்லியமாக நம்மை வைத்து விளையாடுகிறான். அவனுக்கு தெரியும் இந்து தர்மத்தினால் தான் பாரத நாடு சிறப்பான நாடாக இருக்கிறது. பாரத நாட்டை சீரழிக்க வேண்டுமென்றால் முதலில் இந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்பது அவனுடைய தெளிவான எண்ணம். அந்த எண்ணத்தை அவர் நேரடியாக பயன்படுத்தாமல் மறைமுகமாக நம் நாட்டில் உள்ளவர்களையே நமக்கு எதிரான ஆயுதமாக திருப்புகிறான். இதை நாம் உணராமல் அவனுக்கு துணைபுரிவது தான் மிகவும் வேதனை அளிக்கிறது.
நமது ஆலயங்களில் இனத்தை பார்த்தோ, சமூகத்தை பார்த்தோ அனுமதிப்பதில்லை பக்தி, சுத்தமான எண்ணங்கள் இவைதான் நம் கடவுள் இருக்கும் ஆலயத்தில் நுழைய வைக்கிறது. நமது தாரக மந்திரமே அன்பே சிவம், பார்க்கும் இடம் மற்றும் ஒவ்வொரு உயிர்களுக்கு உள்ளே சிவம் இருப்பதை பார்ப்பது தான் இந்து தர்மத்தின் நெறியாகும். இப்படி இருக்க இதுவரை அமைதி சூழலில் இருந்த இந்து தர்மத்தில் சூறாவளியை ஏற்படுத்த பல விஷமக் கூட்டம் சதி செய்து கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு இந்த பதிவின் வாயிலாக இந்துக்கள் தெரிவிப்பது என்ன என்றால் நீங்களும் இந்த புண்ணிய பூமியில் பிறந்தவர்கள் தான் நீங்களும் இந்துக்களின் சகோதரர்கள் தான் தீயவழியில் செல்லும் நீங்கள் நல்ல வழியில் உங்களை மாற்ற இந்து தர்மம் உங்களுக்கு வழி காட்டுகிறது. நீங்கள் மூழ்கும்போது இந்துக்கள் உங்களை கரை சேர்ப்பார்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் எண்ணத்தை மாற்றும் வரை இந்துக்கள் ஒன்று சேர்ந்து பணிபுரிவார்கள். உங்களுக்கு புரிய வைப்பதற்காக பின் வருகின்ற இந்த பதிவில் சிதம்பரம் நடராஜர் கோவிலைப் பற்றியும் அதில் எந்த சமூகத்தினர் அர்ச்சகராக இருக்கிறார்கள் என்பதை பற்றியும் தெரிவிக்கிறோம்.
தல வரலாறு:
பஞ்சபூத ஸ்தலங்களில் முதன்மையான தலம் சிதம்பரம் ஆகும். இந்த ஆலயம் 3500 ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவரால் கட்டப்பட்ட ஆலயம் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயம் முழுக்க முழுக்க விஞ்ஞானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலயமாக உள்ளது. பதஞ்சலி முனிவர் கோவிலை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒரு வழிமுறையாக வகுத்து இதற்கு ஒரு மக்கள் குழுவை ஏற்படுத்தி அந்த ஒழுங்கு முறையைக் கற்றுத் தந்து பயிற்சி அளித்தார்.
அவர்கள் பல தலைமுறையாக இந்த திருத்தலத்தை பார்த்துக்கொள்கிறார்கள். “சங்க இலக்கியமான கலித்தொகையில்” முதல் பாடல் சிதம்பர நடராஜன் துதியாக உள்ளது. இந்த ஆலயத்தின் சொத்துக்களை முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் கொள்ளையடித்து கோயிலை சேதப்படுத்தியுள்ளனர். இந்த ஆலயத்தை சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவர் மன்னர்களால் இதனை புதுப்பித்து வழிபட்டனர். இத்தளத்தில் “அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்” போன்ற சைவக் குரவர்கள் மூலம் தேவாரப்பாடல் பாடப்பட்ட கோயிலாகும்.
இந்த ஆலயம் ஆடல் கலைக்கும், இசை கலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆலயமாகும். நம் பாரத பண்பாடு கலாச்சாரம் பாதுகாத்த சிறப்பும் சிதம்பர ஆலயத்திற்கு உண்டு. 63 நாயன்மார்கள் வரலாற்றை பாதுகாத்த கோவில் சிதம்பரம் ஆகும். அந்தக் காலத்திலேயே அனைத்து சமூகத்தினரும் கோவிலுக்குள் சென்ற ஆலயம் சிதம்பரம் ஆகும். பட்டியல் சமூகத்தை சேர்ந்த “நந்தனார்” சிவன் மீது கொண்ட பக்தியால் சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று நடராஜருடன் ஐக்கியமானார். சிதம்பர கோவில் அர்ச்சகராக இருப்பவர்கள் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்ட சமூகத்தினரே. என்பதை இந்தப் பதிவின் வாயிலாக உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். சிதம்பர நடராஜனை வேண்டி வணங்குகினால் வாழ்வில் இன்பத்திணை பெறுவீர்கள்.