தமிழகத்தையே குலை நடுங்க வைத்த தோழர் லீலாவதியின் படுகொலை..!

தமிழகத்தையே குலை நடுங்க வைத்த தோழர் லீலாவதியின் படுகொலை..!

Share it if you like it

பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நிகழ்ந்து வரும் சம்பவங்கள் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும், ஏற்படுத்தி வருகிறது என்பதை சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள், பத்திரிக்கைகள், வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடியும்.

தி.மு.கவை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமில்லாமல், மாற்று கட்சியை சேர்ந்த பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு, மரியாதை, என்பது திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.  அதன் நீட்சியாக தமிழகத்தையே உலுக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லீலாவதியின் படுகொலை குறித்து பார்ப்போம்.

நடந்தது என்ன?

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மனைவி தான் லீலாவதி.  வீட்டில் நெசவு வேலை செய்து கொண்டிருந்த தனது மனைவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்பிரிவான ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினராக சேர்க்கிறார்.


மண
வாழ்க்கையில் இருந்தவர் முதன் முதலில், பொது வாழ்க்கையில் அப்பொழுது தான் அடியெடுத்து வைக்கிறார். கட்சிப் பணியில் அதிக ஈடுபாடு காட்டியதன் வாயிலாக குறுகிய காலத்திலேயே லீலாவதி கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும்,  வில்லாபுரம் பகுதி மக்களின் நம்பிக்கைக்கு உரியவராகவும் உயர்கிறார். 

 

வட்டிக்குப் பணம் வசூல், ரேஷன் பொருள்கள் கடத்தல், அரசு குடிநீரை விலைக்கு விற்பது, என ரௌடியிசம் கொடி கட்டி பறந்த காலம் அது. ரேஷன் கடையில் முறைகேடு, ரௌடிசம், ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் சட்ட விரோதமாக விற்பனை என வில்லாபுரம் பகுதியில் பிரச்னைகள் ஏராளம். அப்படிப்பட்ட சூழலில் 1996 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க அரசு மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. அப்பொழுது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வில்லாபுரம் 59-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெறுகிறார் லீலாவதி. இவரின் வளர்ச்சி, மற்றும் மக்கள் சார்ந்த தொடர் போராட்டங்கள் மூலமாக இவருக்கு அப்பகுதியில் செல்வாக்கு உயர்கிறது.

‘கவுன்சிலர் என்கிற முறையில் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தட்டிக் கேட்பது, தண்டல் வசூல், செய்யும் ரௌடிகளின் அட்டூழியங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து என லீலாவதியின் எதிர்ப்பு அரசியல் ரெளடிகளின் வருமானத்துக்கு பெரும் தடையை ஏற்படுத்தியது.

லீலாவதி மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆகும் வரை, அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியவர் தி.மு.க-வை சேர்ந்த முத்துராமலிங்கம். கவுன்சிலர் தேர்தலில் தனது உறவினர் அடைந்த தோல்வி, லீலாவதியின் தொடர் எழுச்சியின், காரணமாக அவர்  படுகொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து 2006- ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., 2008 அண்ணா பிறந்த நாள் அன்று குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்தது.

பெண் சுதந்திரம், பெண் பாதுகாப்பு, என்று கூறும் கம்யூனிஸ்ட் தோழர்கள். லீலாவதிக்கு நேர்ந்த கொடூரத்தை எல்லாம் மறந்து விட்டு, துளியும் வெட்கமின்றி இன்று தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து வருவது வெட்க கேடான செயல் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it