தமிழக பெண்களின் எதிர்காலம் என்ன ஆகும் – ஒரு பயங்கரத்தின் பின்னணி

தமிழக பெண்களின் எதிர்காலம் என்ன ஆகும் – ஒரு பயங்கரத்தின் பின்னணி

Share it if you like it

நான் தமிழகத்தை சார்ந்த ஒரு பெண். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும்போது சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபோது முன்பு நடந்ததைப் போன்று அசம்பாவிதம் நடக்காது என்று நினைத்தேன், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது பிரச்சனை பூதாகரமாக அல்லவா வெடித்தது. பெண்களுக்கு காவல் அரணாக இருக்க வேண்டிய தமிழக அரசு இதை தவற விட்டது வருத்தத்தை தரக்கூடியதாக உள்ளது. பண்டைய காலத்தில் பெண்களை மதித்து நடந்த நமது முன்னோர்கள் இதுதான் நமது கலாச்சாரம் என்று நமக்கு அறிவுறுத்தி உள்ளார்கள். இன்று அனைத்துத் துறையிலும் பெண்கள் வல்லமை படைத்தவர்களாக இருந்தாலும் அவ்வப்போது அவர்களுக்கு நிகழக்கூடிய அசம்பாவிதங்கள் அவர்களை மேன்மேலும் வளர தடையாக உள்ளது.

இந்த ஆட்சியில் பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் பயந்து தான் இருக்கிறார்கள். இன்றைக்கு மிக அதிகமாக பெண்களுக்கு நடக்கும் கொடுமை பாலியல் வன்கொடுமை ஒருவனுக்கு ஒருத்தி என்று தன் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்ணையும் சகோதரியாக நினைத்த ராமபிரான் பிறந்த பூமியில் இது. “பிறர்மனை நோக்கா” என்று உலகப் பொதுமறை நூலான திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வாழ்ந்த புண்ணிய பூமி மாதர்குல மாணிக்கம் அவ்வையார், காரைக்காலம்மையார் தெய்வமாக இருக்கிற பூமியாம் தமிழகத்தில் இன்று பெண்களுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லைகள் எத்தனை எத்தனை. ஒரு மாதத்திற்கு முன் தமிழகத்தில் உள்ள பழனி கோயிலுக்கு வந்த கேரள பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கேட்டால் நெஞ்சு பதறுகிறது.

கடந்த மாதம் 19ம் தேதி பழனி முருகன் கோவிலுக்கு தன் கணவருடன் வந்த பெண்ணை அங்குள்ள ஒரு கும்பல் அந்தப் பெண்ணை கடத்தி அந்தப் பெண்ணின் கணவரை அடித்து காயப்படுத்தி விட்டு அந்தப் பெண்ணை அங்கிருந்து ஒரு விடுதிக்கு கொண்டு சென்று துடிக்கத் துடிக்க அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தார்கள். பிறகு அந்தப் பெண் அங்கிருந்து தப்பி காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். ஆனால் காவல்துறையினர் அந்த புகாரை வாங்க மறுத்து விட்டனர் மக்களுக்கு காவலனாக இருக்கவேண்டிய காவல்துறையே இப்படி இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்னதான் செய்யமுடியும். அந்தப் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும், அந்த கணவரின் மனநிலை எப்படி இருக்கும், தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இப்படி ஒரு நிலையா! சட்டம் ஒழுங்கு மிக சரியான முறையில் உள்ளது, பெண்களுக்கு எங்கள் ஆட்சி பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் இப்போதைய ஆளும் கட்சி கொக்கரித்துக் கொண்டிருக்கிறதே இதுதான் உங்கள் ஆட்சியின் சட்டம் ஒழுங்கா? மற்றொரு மாநிலத்தில் இருந்து வந்த பெண்ணிற்கு இந்த கதி என்றால் உள்ளூரில் இருக்கும் பெண்களின் நிலை என்ன? சட்ட ஒழுங்கை மதிக்கக்கூடிய காவல்துறையே சட்டத்தை மதிக்கவில்லை தட்டிக் கேட்குமா தமிழக அரசு அல்லது கைகட்டி வேடிக்கைப் பார்க்குமா? “மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் கொளுத்துவோம்” என்ற கவிதை எழுதிய பாரதி பிறந்த மண் இது தாங்கள் தானே சமுதாயம் சீர்திருத்தம் கொண்ட மாநிலம் தமிழகம் என்று அறைகூவல் விடும் தமிழக அரசு. இதுதான் உங்கள் சமுதாய சீர்திருத்தமா? எங்கே போனது உங்கள் சீர்திருத்தம் காற்றில் பறக்க விட்டீர்களோ?


Share it if you like it