நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் இறக்குமதி செய்து அதற்கான இறக்குமதி வரியும் செலுத்தி விடுகிறார். வாகன பதிவுக்காக சென்ற பொழுது, நுழைவு வரி செலுத்த சொல்கிறார்கள். நுழைவு வரி செலுத்தாமல், வாகன பதிவு செய்ய இயலாது. இதனால் வாகனத்தை பொதுவெளியில் பயன்படுத்தவும் இயலாது. இந்த சூழ்நிலையில் தான் நுழைவு வரிக்கு விலக்கு கேட்டு 2012ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கில் கூறப்பட்டவை:
விலையுயர்ந்த காரை இறக்குமதி செய்த புகழ்பெற்ற சினிமா நடிகர், வரியை சரியாக மற்றும் உடனடியாக செலுத்திருக்க வேண்டும். ஆனால் விலக்கு கேட்டு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
நமது நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பே வரிவிதிப்பு முறையாகும். வரிவிதிப்பானது வருவாயை சீறாக வைத்து பொருளாதார வளர்ச்சியை நிர்வகிக்கிறது.
அரசாங்கத்தினால் வசூலிக்கப்படும் வரியானது பள்ளிகள், மருத்துவமனைகள், ஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டங்கள் போன்ற சமூக நலத் திட்டங்கள் மற்றும் சாலைத் திட்டங்கள், ஃப்ளைஓவர்கள், ரயில்வே, துறைமுகங்கள், சட்டம் – ஒழுங்கு அமலாக்கம், பெரியவர்களுக்கு ஓய்வூதியம், வேலையற்றோர் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடிமக்களுக்கு நன்மைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கானது.
வரி செலுத்துவது என்பது குடிமகனின் கடமை. அது கட்டாயமாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும்; சொந்தமாக தீர்மானிப்பதற்கு இது நன்கொடை அல்ல.
ஊழலை ஒழிப்பதாகவும், சமூக நீதியை நிலைநாட்டுவதாகும் திரைப்படங்களில் நடித்து விட்டு, வரியை தவிர்ப்பது மற்றும் வரி ஏய்ப்பு செய்வது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. புகழ்பெற்ற உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களே வரியை சரியாக கட்டாமல் இருப்பது, அரசியலமைப்பின் நோக்கமான சமூக நீதியை அடைய காலதாமதமாக்கும்.
வரியிலிருந்து விலக்கு கேட்க ரிட் மனு தாக்கல் செய்து அதனை 9 வருடங்கள் நிலைவையில் வைத்திருந்தது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இந்த 9 வருடங்களில் வரி செலுத்தப்பட்டதா என்பதனை பற்றிய தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
நடிகர் விஜய் தனது சொந்த உபயோகத்திற்கு வாங்கியிருக்கும் விலையுயர்ந்த கார் ஆனது, அவரது லட்சக்கணக்கான ஏழை ரசிகர்கள் ரத்தத்தை வேர்வையாக்கி கடும் உழைப்பினால் சம்பாதித்ததினால் வந்த பணம் என்பதனை உணர வேண்டும்.
இவ்வாறாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பு:
17. 07. 2012 அன்று வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவில் கூறியுள்ளபடி நுழைவு வரியில் 20% செலுத்தியிருந்தால், மீதித்தொகையை 2 வாரங்களுக்குள் செலுத்துமாறு உத்தவிட்டார். மேலும், 1 லட்சம் அபராதம் வழங்கி மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், நடிகர் விஜயின் BMW X5 காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு 2005ல் தாக்கல் செய்த மனு 2019ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
#BREAKING || நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்..! #Chennai | #MadrasHighCourt | #ActorVijay | #Fine | #RoyceRolls | #Car | #Tax | https://t.co/CKGwVu97Ie pic.twitter.com/WzXsdT5ZFB
— Polimer News (@polimernews) July 13, 2021
நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பு#நடிகர்விஜய்1லட்சம்அபராதம் #1லட்சம்அபராதம்#காருக்குவரிவிலக்குகேட்டவிஜய் #ActorVijay pic.twitter.com/JwNXXTBhrm
— Unmai Kural (@unmaikuraltv) July 14, 2021
#KathirToons | குட்டி ஸ்டோரி’ லோடிங்! | #ActorVijay | #VijayTaxEvasion | #வரிகட்டுங்கவிஜய் | #HighCourt | #Thalapathy pic.twitter.com/zn4rTGDGAc
— Kathir News (@KathirNews) July 14, 2021